No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - பொன் நகைகளோடு அலங்கரிக்கப்பட்ட பன்றி..!!

Apr 07, 2023   Ramya   208    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... பொன் நகைகளோடு அலங்கரிக்கப்பட்ட பன்றி..!!

🌟 மக்கள் அனைவரும் கூடியிருந்த மைதானத்தின் நடுவில் பன்றி ஒன்று ஓடி கொண்டிருந்தது. அதனுடைய தோலை அம்புகளால் பிளப்பதே கடினம். அதற்கு மேல் மிகவும் கடினமான பொன் நகைகளும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

🌟 போட்டியில் கலந்து கொண்டவர்கள் பன்றியின் ஓட்டத்திற்கு தகுந்தவாறு பல விதங்களில் அவரவர்களின் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அம்புகளை தேர்ந்தெடுப்பதே அவர்களுக்கு பெரும் போட்டியாக இருந்தது. ஏனெனில் சில அம்புகள் அப்பன்றியின் மீது சரியாக எய்தும், அது எந்தவித பயனையும் அளிக்காமல் போய் விட்டது.

🌟 சிறிது நேரம் கழித்து யானையின் மீது அமர்ந்திருந்த காம்பிலி நாட்டை சேர்ந்த மன்னன் பன்றியை நோக்கி அம்பை எய்தினார். அம்பின் வேகமானது முன்னோக்கி அதிகரிக்க, இவரோ நிலை தடுமாறி கீழே விழுந்தார். இவர் விழுவதை கண்டு அரங்கமே சிரிக்க துவங்கியது. ஆனாலும் இவரின் அம்பு பன்றியை தாக்கவில்லை.

🌟 அவரை தொடர்ந்து அத்தினாபுரத்து மன்னர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். மற்ற அம்புகளை விட வலுவாக இருக்கக்கூடியதாகவும், விரைவாக செல்லக்கூடியதாகவும் இருக்கக்கூடிய அம்புகளை எய்தினார்கள். அவர்கள் எய்த அம்புகள் பன்றியின் கவசத்தின் மேல் பட்டு விழுந்ததே தவிர, கவசத்திற்கு ஒன்றும் ஏற்படவில்லை.

🌟 அவர்களுக்கிடையில் அமர்ந்திருந்த கோசல நாட்டு மன்னர் திடீரென்று எழுந்து, வளைவாகவும், வலிமையாகவும் இருக்கக்கூடிய அம்பினை தேர்ந்தெடுத்தார். அவர் எய்த அம்பானது பன்றியை கொன்று விட்டு மீண்டும் தன் கைக்கு வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த அம்பு பன்றியை தாக்குவதற்கு பதிலாக வளைந்து நெளிந்து மேகத்தை நோக்கி சென்று அங்கு பல வித்தைகளை காண்பித்து விட்டு தரையில் விழுந்தது.

🌟 பின் காசியை சேர்ந்த மன்னன் அம்பு எய்தினார். அந்த அம்பு பன்றியை தாக்குவதற்கு பதிலாக மைதானத்தின் தரையில் குழியை உருவாக்கியது.

🌟 இவர்களை பார்த்து சிரித்த அவந்தி நாட்டு மன்னன் அந்த பன்றியை நான் கொல்கிறேன் பாருங்கள்! என்று கூறி கொண்டே வில்லின் நாணை ஆவேசமாக இழுத்தார். அம்பு முன்னோக்கி செல்வதற்கு பதிலாக வில்லானது முறிந்து உடைந்தது.

🌟 பின் கலிங்க நாட்டு மன்னன் அம்பு எய்தினார். அவர் எய்த அம்பானது பன்றியின் வாய் அருகே சென்றதே தவிர, அதன் மீது சிறு கீறலை கூட ஏற்படுத்தவில்லை.

🌟 அதன் பின்பு மகத நாட்டு மன்னனும் பன்றியை நோக்கி அம்பை எய்தினார். அவர் எய்த அம்பு பன்றியின் மீது பட்டும், அதன் கவசத்தை கூட பிளக்க முடியாமல் உடைந்து விழுந்தது.

🌟 பல நாடுகளில் இருந்து வந்த மன்னர்கள் பலவாறாக முயற்சி செய்தும் யாராலும் அந்த பன்றியை கொல்ல முடியவில்லை. நாட்கள் தான் அதிகரித்து கொண்டு போனதே தவிர, அந்த பன்றியை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.


Share this valuable content with your friends