No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - விதேய நாட்டு மன்னனை வரவேற்ற கட்டியங்காரன் !!

Apr 06, 2023   Ramya   176    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... விதேய நாட்டு மன்னனை வரவேற்ற கட்டியங்காரன் !!

🌟 பின் ஏமாங்கத நாட்டின் எல்லையில் கூடாரங்களை அமைத்து மன்னரும், வீரர்களும் முறையான பாதுகாப்போடு தங்கினார்கள். அங்கே சீவகன் தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாத விதத்தில் தன்னுடைய உருவத்தை மாற்றி கொண்டான். பின் கோவிந்தனிடம் சென்று, மாமா! அடுத்து நாம் என்ன செய்ய போகிறோம்? என்று கேட்டான்.


அதற்கு கோவிந்தன், கட்டியங்காரன் அனுப்பிய தூதில் இருக்கக்கூடிய உண்மையை புரிந்து, அவனுடன் நட்பு பாராட்ட வருவதாக தகவல் அனுப்பி வைத்திருக்கின்றேன். அவன் பதில் கூறும் வரை நாம் பொறுமையுடன் தான் இருக்க வேண்டும் என்றார்.

🌟 மாமா! எனக்கு ஒரு விஷயம் தோன்றுகிறது. அதாவது, கட்டியங்காரனை இப்பொழுது வீழ்த்துவது மிகவும் எளிமையான ஒன்றாகும். இமை மூடி திறப்பதற்குள் அவன் உடலில் இருந்து உயிரை எளிதில் எடுத்து விடலாம். ஆனால் அது தர்மமாகாது. அது சரியானதாக இருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை.

🌟 அதுமட்டுமல்லாமல், கட்டியங்காரனை போர்க்களத்தில் நேருக்கு நேராக எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டும். அதில் தான் முழுமையான வெற்றியும், மகிழ்ச்சியும் அடங்கியிருக்கின்றது. பல வருடங்களாக நானும், என் தாயும் அனுபவித்த வேதனைக்கு அது ஒரு தீர்வாகவும் இருக்கும். ஆகையால் அவனுக்கு படை திரட்டுவதற்கு சிறிது அவகாசத்தை கொடுப்போம் என்றான் சீவகன்.

🌟 என்ன சீவகா! நீ தானே அவனுக்கு படை திரட்டுவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டாம் என்றாய். ஆனால் இப்பொழுது அவனுக்கு படை திரட்ட அவகாசம் கொடுக்க வேண்டும் என்கின்றாயே! ஏன் இந்த குழப்பம்? என்று கேட்டார் கோவிந்தன்.

🌟 அவன் தர்மத்திற்கு புறம்பாக சூழ்ச்சி செய்து எனது தந்தையை கொன்று, எனது தாயையும் என்னிடத்திலிருந்து பிரித்து இவ்வளவு நாட்கள் என்னை துன்பத்தில் ஆழ்த்தினான். ஆகையால் நானும் அவனை அதே முறையில் தோற்கடிக்க விரும்பவில்லை. தர்ம வழியிலேயே அவனை வெற்றி கொள்ள வேண்டும் என்றான் சீவகன்.

🌟 சீவகனின் கூற்றை கேட்ட கோவிந்தன், வயதில் சிறியவனாக இருந்தாலும் உன்னுடைய எண்ணம் மிகப் பெரியது சீவகா! உனது தந்தையை சூழ்ச்சி செய்து கொன்றவனை கூட தர்ம வழியிலேயே வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றாயே! உன்னுடைய குணம் யாருக்கு வரும்? உன்னை எண்ணி உனது தந்தையும், தாயும் பெருமை அடைவார்கள் சீவகா! நீ விரும்பியது போலவே அவன் படை திரட்டுவதற்கு ஒரு வாய்ப்பையும் உருவாக்கி தருகின்றேன் என்றார்.

🌟 இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்த பொழுது பணியாள் ஒருவன் உள்ளே வரலாமா? என்று கேட்டு வெளியே நின்றான்.

🌟 கோவிந்தனும் உள்ளே வருக! என்று கூற, உள்ளே வந்த பணியாள் மன்னனை வணங்கி, மன்னா! உங்களை காண்பதற்காக ஏமாங்கத நாட்டிலிருந்து தூதுவர் ஒருவர் வந்திருக்கின்றார். அவரை உள்ளே அனுப்பவா? என்று கேட்டான்.

🌟 சீவகனை பார்த்த கோவிந்தன், காலம் கனிந்து விட்டது போல என்று கூறி கொண்டே தூதுவனை உள்ளே அனுப்புமாறு கூறினார்.


🌟 பிறகு உள்ளே வந்த தூதுவன் சக்கரவர்த்தியை வணங்கி விட்டு ஏமாங்கத நாட்டு அரசர் அனுப்பிய ஓலையை படிக்க துவங்கினான். விதேய நாட்டை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய சக்கரவர்த்தியான கோவிந்தனுக்கு! ஏமாங்கத நாட்டின் சக்கரவர்த்தியான கட்டியங்காரனின் வணக்கங்கள்!

🌟 உங்களை வரவேற்பதற்காக 200 யானைகளையும், 100 தேர்களையும், 1000 குதிரைகளையும் அன்பளிப்பாக அனுப்பி இருக்கின்றேன் என்று படித்தான் தூதுவன்.

🌟 உன்னை கொல்வதற்கு நீயே தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்கிறாயா என்று மனதில் நினைத்து கொண்ட கோவிந்தன், தனது அருகில் மாறுவேடத்தில் இருந்த சீவகனை பார்த்தார்.

🌟 உடனே படை தளபதியான சீவகன், அவர் அனுப்பியதை இரண்டு மடங்காக அனுப்பி கணக்கை தீர்த்து கொள்வோம் என்று கூறினான்.

🌟 கோவிந்தன், சீவகன் கூறியதை போலவே தூதுவனிடம் கூறி அனுப்பி வைத்தார்.

🌟 பின்பு கோவிந்தனும், அவருடைய படைகளும் கட்டியங்காரன் ஆண்டு கொண்டிருக்கக்கூடிய ராஜ்யத்திற்குள் நுழைந்தார்கள். அங்கு அவரை வரவேற்க பலவிதமான அலங்கார தோரணங்களும், வாசனை மிகுந்த பூக்களும் தூவப்பட்டன.

🌟 கோவிந்தனை பார்த்த கட்டியங்காரன் அருகில் சென்று அவரை அணைத்து கொண்டான். அப்பொழுது கோவிந்தனுக்கு, தனது இடையில் இருந்த வாளை உருவி அவன் சிரத்தை கொய்ய வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருந்தாலும், என்ன செய்வது? என்று தனது கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு அமைதியாக இருந்தார்.


Share this valuable content with your friends


Tags

என்னை கடத்தி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? லாட்டரியில் பணம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நிறைய இனிப்புகளை கனவில் கண்டால் என்ன பலன்? பரிதிமாற் கலைஞர் வளர்பிறை guruswamy வாசனைக் கொண்டே உணவின் ருசியை சொல்லக்கூடியவர்கள் இவர்கள்தான் march 25 செவ்வாய்க்கிழமை பெண் பார்க்க கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உயிர்துறந்த காப்பாளனும் 07.10.2020 Rasipalan in PDF Format!! உலிமிரி இராமலிங்கசுவாமி திருவாதிரை மூதறிஞர் இராஜாஜி தினசரி ராசிபலன்கள் (27.06.2020) யாரையும் நம்பாத ராசிக்காரர் இவர்களே! 22.10.2018 - 28.10.2018 ராசிபலன்கள் PDF வடிவில் !! kayilayam விமானம் கீழே விழுந்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?