No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மன்னனுக்கு ஓலை அனுப்பிய கட்டியங்காரன்..!!

Apr 06, 2023   Ramya   207    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மன்னனுக்கு ஓலை அனுப்பிய கட்டியங்காரன்..!!

🌟 அப்பொழுது சீவகனை பார்த்த கோவிந்தன் சிம்மாசனத்தில் இருந்து எழுந்து சீவகனை வரவேற்றதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய அரியணைக்கு இணையாக உள்ள அரியணையில் சீவகனை அமர வைத்தார்.

🌟 என்ன மாமா! திடீரென்று என்னை அரச சபைக்கு வர சொல்லி இருக்கின்றீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்கள் அரியணைக்கு நிகராக என்னை அமர வைத்து இருக்கின்றீர்கள்! இதற்கெல்லாம் என்ன காரணம்? என்று கேட்டான் சீவகன்.

🌟 அதற்கு கோவிந்தன், அது ஒன்றுமில்லை சீவகா! இராசமாபுரத்திலிருந்து கட்டியங்காரன் கொடுத்த ஓலையை எடுத்து கொண்டு தூதுவன் ஒருவன் வந்திருக்கின்றான். அதனால் தான் உன்னை அழைத்து வரும்படி கூறினேன்.

🌟 அப்படியா செய்தி.. அந்த ஓலையில் என்ன இருக்கிறது என்று அவரையே படிக்க சொல்லுங்கள் என்றான் சீவகன்.

🌟 உடனே மன்னரும் தூதுவனை படிக்க சொல்ல, தூதுவனும் படிக்க துவங்கினான். அதாவது, விதேய நாட்டை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய கோவிந்த மன்னருக்கு ஏமாங்கத நாட்டு மன்னனான கட்டியங்காரனின் பணிவான அன்பு கலந்த வணக்கங்கள்! என்று படித்தான்.


🌟 இதை கேட்டதும் சீவகனுடைய நண்பர்கள், யாருக்கு வேண்டும் உனது அன்பு! என்று கூற, உடனே சீவகன் அவர்களை அமைதிப்படுத்தி, நாம் அரச சபையில் இருக்கின்றோம். ஆகையால் பொறுமை காக்க வேண்டும் என்று கூறினான்.

🌟 பிறகு மீண்டும் அந்த ஓலையை படிக்க துவங்கினான் தூதுவன். வணக்கத்திற்குரிய கோவிந்த மன்னரே! உங்களுடைய மாமனான சச்சந்தனை நான் கொன்று விட்டதாக ஒரு செய்தி ஊர் முழுவதும் பரவி இருக்கின்றது. அதை நீங்களும் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். ஆனால் உண்மையில் அந்த செய்தி உண்மை அல்ல. என் மீது பகை கொண்ட நயவஞ்சகர்கள் சிலர் உண்மைக்கு மாறாக சில பொய்யான விஷயங்களை உருவகப்படுத்தி பரப்பி வருகின்றார்கள். மேலும் நம் இரு நாடுகளுக்கும் இடையே தேவையில்லாமல் பகைமையை ஏற்படுத்தி, அழிவினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உங்களது நாட்டிற்கு சிலர் வந்திருப்பதாக என்னுடைய ஒற்றர்கள் மூலம் நான் அறிந்தேன்.

🌟 உங்களுடைய மாமன் இறப்பதற்கு முன், அசனி வேகம் என்ற பட்டத்து யானைக்கு திடீரென்று மதம் பிடித்து, சங்கிலியை அறுத்து கொண்டு அருகில் இருந்த குதிரை லாயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த அனைத்து குதிரைகளையும் மிதித்து கொண்டிருந்தது.

🌟 இந்த தகவலானது சச்சந்த மன்னருக்கு சென்றது. அசனி வேகத்தை அடக்கக்கூடிய பாகர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் வர வேண்டாம் என்று கூறிவிட்டு, மனதில் மிகுந்த தைரியத்தோடு மதம் பிடித்த யானையை நான் மட்டும் அடக்கி வருகின்றேன் என்று குதிரை லாயத்திற்குள் நுழைந்தார்.

🌟 இவை மட்டும் தான் எங்களுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து கூழான அவர் உடல் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது என்று படித்தான் தூதுவன்.

🌟 அப்பொழுது கோவிந்தன் மனதிற்குள்ளே, பரவாயில்லையே கட்டியங்காரன் நம்பும் விதத்தில் தான் கதைகளை உருவாக்கி இருக்கின்றான் என்று எண்ணி கொண்டார்.

🌟 அவ்வாறு எண்ணி கொண்டிருந்தபோதே, மேலும் படிக்க துவங்கினான் தூதுவன். அதாவது, நான் கூறும் இந்த செய்தியை நம்புவதும், நம்பாமல் இருப்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே!

🌟 மேலும் என்னுடைய மன்னரான சச்சந்தனின் விருப்பப்படியே, நான் இன்றளவும் மன்னனாக தொடர்ந்து ஆட்சி செய்து, அவர் செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றேன். இருந்தாலும், இந்த நாட்டிற்கு உரிய மன்னன் நான் அல்ல! என்பதை இன்றளவும் நான் மறக்கவில்லை.

🌟 அதுமட்டுமல்லாமல் என் மீது ஏற்பட்டிருக்கக்கூடிய பழிகளை துடைக்க ஒரேயொரு வழி தான் இருக்கின்றது. அது உங்களை ஏமாங்கத நாட்டிற்கு வரவழைப்பது மட்டுமே தான். உங்களுடைய முடிவு என்னவோ அதற்கு நான் கட்டுப்படுவேன். உங்களுக்காக நான் எனது உயிரையும் நீப்பேன். உங்களுடைய இறுதி தீர்ப்பிற்கு பின்பே என்னுடைய ஆட்சி தொடரும். இப்படிக்கு கட்டியங்காரன்! என்று அந்த ஓலையை படித்து முடித்தான் தூதுவன்.

🌟 இதை கேட்ட சீவகன் உடனடியாக அரச சபைக்கு வெளியே சென்று சிரித்து கொண்டிருந்தான். அப்பொழுது கோவிந்தன் அங்கே சென்று, எதற்காக சீவகா! இப்படி சிரித்து கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டார்.


🌟 அதற்கு சீவகன், அவன் அழிவிற்கான நேரம் நெருங்கி விட்டது என்று அவனுக்கே தெரிந்து விட்டது போல் இருக்கின்றது. அதை நினைத்து தான் சிரிக்கின்றேன்.

🌟 மேலும் கட்டியங்காரனுக்கு நம் மீது எள்ளளவும் சந்தேகம் வந்து விடக்கூடாது. ஏனென்றால், ஒரு துளி சந்தேகம் வந்தாலும் அவன் பெரும் படையை திரட்டி விடுவான். இப்பொழுது வந்திருக்கும் தூதுவனிடம் கூட நாம் நட்பாகவே பதில் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். நாட்டு மக்களிடையே நீங்களும், கட்டியங்காரனும் நல்லுறவு கொண்டிருப்பது போலவே நடந்து கொள்ளுங்கள். அதே சமயத்தில் அவனை பழி தீர்ப்பதற்கான படையையும் நாம் திரட்டுவோம் என்று கூறினான் சீவகன்.

🌟 இதை கேட்ட கோவிந்தனும், சீவகன் கூறியபடியே தூதுவனிடம் கூறி அனுப்பி வைத்தார். பின் போருக்கு தேவையான போர் படைகளை தயார் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள துவங்கினார்.


Share this valuable content with your friends


Tags

இந்த வருஷ மேஷ ராசிபலன்.! வார ராசிபலன் (11.05.2020 - 17.05.2020) PDF வடிவில் !! வார ராசிபலன்கள் (16.09.2019 - 22.09.2019) PDF வடிவில் !! panam படைத்தல் rasaipalan in pdf format 24.06.2019 நீதிமன்றத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?முருகப்பெருமானை கனவில் கண்டால் என்ன பலன்? mamiyar முன்னோர்களால் ஏற்படும் சாபத்தை போக்க சிறந்த பரிகாரங்கள் !! பறவைகள் அடைக்கப்பட்டு இருப்பது போல் கனவு 07.07.2021 Rasipalan in PDF Format!! AATTUKAL சங்கடஹர கணபதி சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி? 09.04.2019 Rasipalan in pdf format!! கை நிறைய திராட்சை பழம் பொறுமை குணம் மிகுந்தவர்கள் இவர்களே! வாழைமரத்தை யாரோ ஒருவர் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சேவல் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகள்