No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அன்னாபிஷேகம் செய்வது ஏன்?

Oct 24, 2018   Ananthi   539    ஆன்மிகம் 

🌟 அன்னம் மனிதனுக்கு மிக முக்கியமானதாகும். அன்னாபிஷேக நாளான இன்று சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி (பச்சரிசி) வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் செய்வது போன்றவை சிறந்த பலனை அளிக்கும். மேலும், சிவனுக்கு அன்னத்தை பூசி பூஜிப்பது ஏன் என்று தெரிந்துகொள்வோம்?

🌟 அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். அன்னத்தை வீணாக்கக்கூடாது.

🌟 தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பௌர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது.

🌟 ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அணைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது.

🌟 ஐம்பெரும் பூதங்களையும் தன்னுள் அடக்கி கொள்ளும் அன்னம் இறுதியில் இறைவனிடத்தில் சேர்கிறது.

🌟 அன்னத்தின் அருமையையும், பெருமையையும் புரிந்து அன்னத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காக அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.


Share this valuable content with your friends


Tags

சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? Saturday Horoscope - 30.06.2018 04.07.2021 Rasipalan in PDF Format!! 19.10.2020 rasipalan in PDF Format!! காவல் நிலையத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? alangaram திருச்செந்தூர் போன்றவை செல்லலாமா? சந்திர கிரகணம் தினசரி ராசிபலன் (26.03.2022) சரித்திர நாயகர்களின் வாழ்க்கை வரலாறு மாங்கல்யம் அலங்காரம் செய்யப்பட்ட அரண்மனைக்குள் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கால பைரவர் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கழுகை கனவில் கண்டால் 11.07.2018 rasipalan சூரியன் வக்ரம் அடைவாரா? திருமணமான ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா? பழங்கள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆண் குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?