No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனுக்கும் சுரமஞ்சரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுதல்..!!

Apr 04, 2023   Ramya   216    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனுக்கும் சுரமஞ்சரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுதல்..!!

🌟 ஏன் அப்படி கூறுகின்றீர்கள்? உங்கள் பெண்ணிடம் நீங்கள் திருமணம் பற்றி கேட்டீர்களா? என்று கேட்டான் சீவகன்.

🌟 அப்பொழுது பின்னால் இருந்து சுரமஞ்சரியின் தாய் குரல் கொடுக்க, ஒரு நிமிடம் சீவகா! என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து சென்றார் சுரமஞ்சரியின் தந்தை.

🌟 அவர் உள்ளே சென்றவுடன் சுரமஞ்சரியின் தாய் அவரிடம், நம்முடைய மகள் வேறு ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினாளே தவிர, சீவகனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறவில்லையே! அவள் மனம் சீவகனை மட்டும் தான் நினைத்து கொண்டிருக்கின்றது. அவனை தவிர வேறு எந்தவொரு ஆண்மகனையும் அவள் ஏற்று கொள்ள மாட்டாள் என்றார்.

🌟 இதை கேட்ட சுரமஞ்சரியின் தந்தை, இதை முன்பே கூறியிருந்தால் நான் அதற்கான ஏற்பாடுகளை அப்பொழுதே செய்திருப்பேன். சரி இப்பொழுது ஒன்றும் ஆகிவிடவில்லை, அதற்கான சூழ்நிலைகளும் சாதகமாக தான் இருக்கின்றது என்று கூறிவிட்டு வெளியே வந்தார்.

🌟 பின் சீவகனை பார்த்து, எனது மகளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதில் எனக்கு மனப்பூர்வமான சம்மதம் என்று கூறினார். மேலும் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நானே மேற்கொள்கின்றேன் என்று கூறினார்.

🌟 உடனே சீவகன் அவரிடத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை சிறிது காலத்திற்கு பிறகு மேற்கொள்ளலாம். அதற்கு முன்பாக எனக்கு சில கடமைகள் இருக்கின்றது. அதை செய்து முடித்துவிட்டு நான் வருகிறேன் என்று கூறினான்.

🌟 என்ன சீவகா! திடீரென்று இப்படி கூறுகின்றீர்கள்? இது என் மகளுக்கு தெரியுமா? என்று கேட்டார் சுரமஞ்சரியின் தந்தை.

🌟 அதற்கு சீவகன், இந்த முடிவை இன்னும் உங்கள் மகளிடம் கூறவில்லை. அவளிடத்தில் விரைவில் கூறி விடுவேன் என்று கூறினான்.

🌟 சரி நீங்கள் இருவரும் முடிவு செய்துவிட்டு என்னிடம் கூறுங்கள். அதற்கு பிறகு நான் திருமண ஏற்பாடுகளை செய்கிறேன் என்றார் சுரமஞ்சரியின் தந்தை.

🌟 பின் சீவகன் அவரிடம் நன்றி கூறிவிட்டு, அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சுரமஞ்சரி இருக்கும் இடத்திற்கு சென்றான்.

🌟 சீவகனை பார்த்ததும் சுரமஞ்சரி அவன் அருகில் வந்து நின்று கொண்டாள். அப்பொழுது சீவகன் சுரமஞ்சரி வந்ததையும் கவனிக்காமல், அவள் வீட்டில் இருந்த ஒரு ஓவியத்தின் அழகை கண்டு ரசித்து கொண்டிருந்தான்.


🌟 நான் அருகில் வந்து நின்று கொண்டிருக்கின்றேன். நீங்கள் என்னை கவனிக்காமல் அந்த ஓவியத்தை கவனித்து கொண்டிருக்கின்றீர்களா? அந்த ஓவியம் என்னை விட அவ்வளவு அழகாக இருக்கின்றதா? என்று கோபமாக கேட்டாள் சுரமஞ்சரி.

🌟 அதற்கு சீவகன், உன்னை விட இந்த ஓவியம் அழகல்ல. ஆனால் ஓவியம் உன்னை போல அழகாக இருக்கின்றது என்றான். இதை கேட்ட சுரமஞ்சரி உடனே சமாதானம் அடைந்தாள்.

🌟 பிறகு சீவகன் சுரமஞ்சரியை பார்த்து, இப்பொழுது நான் எனது கடமையை நோக்கி செல்ல போகின்றேன். சிறிது காலத்திற்குள் அந்த கடமையை செய்து முடித்துவிட்டு திரும்பி வருகிறேன். அதுவரை எனக்காக காத்திரு. முன்பு நீ, நான் வருவேனா? இல்லையா? என்பதே தெரியாமல் காத்திருந்தாய். ஆனால் இப்பொழுது உன்னை கண்டிப்பாக நான் வந்தடைவேன் என காத்திரு என்றான்.

🌟 அதற்கு சுரமஞ்சரி நீர் நிறைந்த விழிகளுடன், மீண்டும் உங்களுக்காக காத்திருப்பேன் என்று கூறினாள்.


Share this valuable content with your friends