No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் இசையில் மயங்கிய சுரமஞ்சரி..!!

Apr 01, 2023   Ramya   132    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனின் இசையில் மயங்கிய சுரமஞ்சரி..!!

🌟 சுரமஞ்சரி நிற்பதை பார்த்த வயதானவர், அழகான பெண்கள் நின்று கொண்டிருந்தால் என் கால்கள் வலிக்குமே... வந்து அமரு பதுமையே! என்று கூறினார்.

🌟 உடனே சுரமஞ்சரி, பார்ப்பதற்கு தான் வயதானவராக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களது பேச்சுக்களெல்லாம் இளமையாக இருக்கின்றது என்று கூறிக்கொண்டே அவருடைய அருகில் அமர்ந்தாள். பின் வயதானவரை பார்த்து, ஆமாம் நீங்கள் எதில் வல்லவர் பேச்சில் வல்லவரா? அல்லது இளமையில் வல்லவரா? என்று கேட்டாள்.

🌟 அதற்கு வயதான தோற்றத்திலிருந்த சீவகன், நான் மறைந்திருப்பதில் வல்லவன் என்று கூறினான்.

🌟 பின், சுரமஞ்சரி வயதானவரை பார்த்து, வயதானாலும் உங்களின் பேச்சுக்களுக்கு மட்டும் குறைவில்லை. சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து சென்றாள்.

🌟 பகல் பொழுது மறைந்து மாலை பொழுது பிறக்க... அங்கிருந்த பணிப்பெண்கள் பொழுதுபோக்கிற்காக வீணையை மீட்டி கொண்டிருந்தார்கள். அவர்கள் எழுப்பிய இசையில் உறக்கம் கலைந்த வயதானவர், என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? ஸ்ருதியுடன் இசைக்க வேண்டியவற்றை ஸ்ருதி இல்லாமல் இசைத்து கொண்டிருக்கின்றீர்களே! என்றார்.

🌟 உடனே அங்கிருந்த பணிப்பெண்களில் ஒருத்தி, வயதானவரே! உங்களுக்கு இசைக்க தெரியும் என்றால் நீங்கள் இந்த வீணையை மீட்டுங்கள் பார்ப்போம்! என்று கூறினாள்.

🌟 அதற்கு வயதானவர், நான் இசைக்க ஆரம்பித்தால், நீங்கள் அனைவரும் என்னிடத்தில் மயங்கி விடுவீர்கள். நான் அவ்வளவு இனிமையாக இசைப்பேன் என்றார்.

🌟 அங்கிருந்த மற்றொரு பணிப்பெண், வயதானாலும் உங்களிடத்தில் இருக்கும் நகைச்சுவைக்கு இன்னும் வயதாகவில்லை. முதலில் நீங்கள் இசையுங்கள். நாங்கள் மயங்குகிறோமா? இல்லையா? என்பதை பிறகு பார்ப்போம் என்று சிரித்து கொண்டே கூறினாள்.


🌟 சரி என்று வயதான தோற்றத்திலிருந்த சீவகனும், சுதஞ்சணன் கற்று கொடுத்த இசை வரத்தை பயன்படுத்தி வீணையை மீட்டி பாட துவங்கினான். அவன் பாட துவங்கியதும் அங்கிருந்த பணிப்பெண்கள் அனைவரும் அவரவர்களையே மறந்து இசையை கேட்டார்கள்.

🌟 அறையினுள் இருந்த சுரமஞ்சரி, எங்கே இருந்து இந்த பாடல் வரி கேட்கின்றது? இவ்வளவு இனிமையான குரலையும், பொருள் நிறைந்த பாடல் வரிகளையும் இதுவரை நான் கேட்டது இல்லையே? யார் இதை பாடுகின்றார்கள்? என்று கூறி கொண்டே வெளியே வந்தாள்.

🌟 சுரமஞ்சரி வருவதை பார்த்ததும் வயதானவர் இசைப்பதை நிறுத்திவிட்டு, நான் தான் இசைக்கின்றேன். வேறு யார் இந்த அளவுக்கு இனிமையாக பாட போகின்றார்கள்? இங்கிருக்கும் உனது கன்னி தோழிகளுக்கு இதை இசைக்கவே தெரியவில்லை என்று கூறினார்.

🌟 சுரமஞ்சரி, பரவாயில்லையே! வயதானாலும் இனிமையான இசைகளை வெளிப்படுத்துகின்றீர்கள் என்று கூறினாள்.

🌟 வயதான தோற்றத்திலிருந்த சீவகன் சிரித்து கொண்டே, இந்த இசை மிகவும் இனிமையானது என்பது எனக்கு தெரியும். உனக்கு பிடித்து போனதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. எனக்கு வயதாகி விட்டதால், உன்னுடைய ஆசைகளையெல்லாம் என்னால் தீர்த்து வைக்க முடியாதே என்றான்.

🌟 அதற்கு சுரமஞ்சரி, எனக்கு யாரிடத்திலும் எந்தவிதமான ஆசையும் கிடையாது என்று கூறினாள்.

🌟 என்ன பொடி போட்டாலும் மயங்க வில்லையே என்று எண்ணிய சீவகன் மீண்டும் பாட துவங்கினான். அந்த பாடலின் வரியும், இசையும் அவளிடத்தில் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியது. அவளிடத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவள் உடல் அசைவுகளில் இருந்தே புரிந்து கொண்ட சீவகன் திடீரென்று இசைப்பதை நிறுத்தினான்.

🌟 உடனே சுரமஞ்சரி, ஏன் இசைப்பதை நிறுத்தி விட்டீர்கள்? தொடருங்கள்! என்று கூறினாள்.

🌟 அதற்கு அந்த வயதானவர், நான் ஒரு வயதானவனாக இருப்பதினால் மட்டுமே, நான் இசைக்கின்ற இசையினை நீ விரும்புகின்றாய். ஒருவேளை நான் வாலிபனாக இருந்தால் என்ன செய்வாய்? என்று கேட்டார்.


Share this valuable content with your friends


Tags

ஞானக்கனி திமீத்ரி மெண்டெலீவ் வைரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? month சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி? mouse rasipalan in pdf format (01.07.2019) !! பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா? gayaththiri manthiram ஜான் ஹென்ரிக் ஊர்ட் தினசரி ராசிபலன்கள் (08.06.2020) விதவை பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? சுய முயற்சிகளின் மூலம் முன்னேறக்கூடியவர்கள் இவர்களே இரவில் இறந்தவர்கள் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூரானை கனவில் கண்டால் என்ன பலன்? பொங்கல் தருவது போல் கனவு கண்டால் வெள்ளிக்கிழமை கோவிலில் முடி காணிக்கை செலுத்தலாமா? சாப்பாடு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Saturday rasipalan - 30.06.2018 பிரதோஷம் அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?