No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - விமலையுடன் சீவகனின் திருமணம்..!!

Mar 30, 2023   Ramya   132    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... விமலையுடன் சீவகனின் திருமணம்..!!

🌟 அதற்கு சாகரதத்தன், நான் உங்களிடத்தில் பொய்யுரைக்கவில்லை. நடந்ததை தான் கூறினேன். இந்த சரக்குகளை விற்பதற்காக நான் செல்லாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வமும் இல்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் நானும் இந்த வியாபாரத்தில் செழித்து விளங்கியவன் தான். அப்பொழுது எனக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள் வேறு யாரும் இல்லை. நீங்கள் அமர்ந்திருக்கும் பொழுது வீட்டில் இருந்து அவ்வப்போது வந்து பார்த்து கொண்டிருந்தாளே அவள் தான். அவள் பெயர் விமலை என்று கூற,

🌟 உடனே சீவகன் அதற்கும், இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இதை ஏன் என்னிடத்தில் கூறுகின்றீர்கள்? என்று கேட்டான்.

🌟 அதற்கு சாகரதத்தன், தொடர்பு இருப்பதினால் தான் உங்களிடம் என் மகளை பற்றி கூறுகின்றேன். அவள் பிறந்தநாளில் இருந்து நேற்று வரை எனது கடையில் உள்ள பொருட்களில் ஒன்று கூட விற்பனை ஆகவில்லை என்றான்.

🌟 ஏன் உங்கள் கடையிலிருந்த சரக்குகள் அனைத்தும் இவ்வளவு நாட்களாக விற்காமல் இருந்தன? என்று கேட்டான் சீவகன்.

🌟 இதற்கான விடை தேடி நான் ஒரு ஜோதிடரிடம் சென்றேன். அவர் எனது மகளின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையையும், பலத்தையும் தீர ஆராய்ந்து விட்டு இதற்கான பதிலை என்னிடத்தில் கூறினார் என்றான் சாகரதத்தன்.

🌟 உடனே சீவகன் உணர்ச்சிவசத்தில், அப்படி அவர் என்ன கூறினார்? என்று கேட்டான்.


🌟 அதாவது, என் மகளின் ஜாதகத்தை பார்த்துவிட்டு, உனது கடையில் இருக்கக்கூடிய பொருட்கள் எதுவும் இதற்குமேல் விற்பனை ஆகாது. உன்னிடத்திலேயே இருக்கும். பல ஆண்டுகள் கழித்து ஒரு வாலிபன் தானாகவே உனது கடையில் வந்து அமர்வான். அவன் அமர்ந்த அந்த நேரத்தில் உனது கடையில் இருந்த அனைத்து பொருட்களும் விற்று தீர்ந்துவிடும் என்று கூறினார் என்றான் சாகரதத்தன்.

🌟 ஓ!! அன்று அந்த ஜோதிடர் கூறியது இன்று நடந்து விட்டது போல் இருக்கின்றதே! என்று சிரித்து கொண்டே கூறினான் சீவகன்.

🌟 ஆமாம், அவர் கூறியதில் ஒன்று நடந்து விட்டது. மற்றொன்று மீதி இருக்கின்றதே! என்றான் சாகரதத்தன்.

🌟 அப்படி அவர் கூறிய மற்றொரு விஷயம் என்ன? என்று கேட்டான் சீவகன்.

🌟 அதற்கு சாகரதத்தன், என் கடையில் வந்து அமரும் அந்த வாலிபன் தான் எனது மகளை திருமணம் செய்து கொள்வான் என்று கூறினார் என்றான்.

🌟 இதை கேட்டதும் சீவகனுக்கு அவனையே அறியாமல் புன்னகை தான் தோன்றியது. விதியின் விளையாட்டுக்கு அளவே இல்லையா! திண்ணையில் அமர்ந்தவனுக்கு திருமணமா! என்று எண்ணி சிரித்தான்.

🌟 மேலும் இந்த திருமணம் வேண்டாம் என சீவகன் எவ்வளவு கூறியும், சாகரதத்தன் அவனை விடுவதாக இல்லை.

🌟 உடனே திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. அனைவரும் காணும் வகையில் சீவகனின் திருமணம் இனிதே நடைபெற்றது.

🌟 சீவகனின் இந்த திருமணத்தை எதிர்பார்க்காத படை வீரர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், நீண்ட நாள் பயணத்தில் சரியான உணவு உட்கொள்ளாமல் இருந்தவர்களுக்கு இந்த திருமணம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.


Share this valuable content with your friends