No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - அரச குமாரர்களுக்கு வித்தைகளை கற்று கொடுத்த சீவகன்..!!

Mar 20, 2023   Ramya   114    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... அரச குமாரர்களுக்கு வித்தைகளை கற்று கொடுத்த சீவகன்..!!

🌟 உடனிருந்த போர் தளபதியோ மன்னா! பார்ப்பதற்கு சிறு பாலகனாக இருக்கின்றான். இவன் எப்படி நமது இளவரசர்களுக்கு போர்க்கலைகளை கற்று கொடுப்பான்? என்று கேட்டான்.

🌟 அதற்கு உடனே சீவகன், எறும்பும் கூட பார்ப்பதற்கு சிறியதாக தான் இருக்கும். ஆனால் யானையின் செவிகளுக்குள் நுழைந்தால் அதன் வேலை பெரியதாக இருக்கின்றது அல்லவா! அது போல் தான் யாரையும் உருவத்தை கொண்டு எடை போடக்கூடாது என்றான்.

🌟 உங்கள் இருவருக்குள்ளும் எந்த சண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டு சீவகனை பார்த்து, உனக்கு கொடுத்திருக்கும் காலத்திற்குள் உன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வெகுமதியை பெற்று கொள்! என்றார் மன்னர்.

🌟 சீவகனுக்கான பணியை கொடுத்த பின் சீவகனை பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்? என்பதை சொல்லவில்லையே என்றார் மன்னர்.

🌟 உடனே சீவகனும் சிந்திக்காமல் எப்பொழுதும் போல தனது உண்மையான நிலவரத்தையே கூறினான். தான் ராசமாபுரத்திலிருந்து வருவதாகவும், வணிக குலத்தை சார்ந்தவன் ஆவேன் என்றும் கூறினான்.

🌟 வணிக குலத்தை சார்ந்தவன் என்றால் போர்க்கலையை எப்படி கற்று கொண்டீர்கள்? உன்னை பார்ப்பதற்கும் வணிக குலத்தை சார்ந்தவன் போல தெரியவில்லையே! என்றார் மன்னர்.

🌟 அப்பொழுது சீவகன் இதை எப்படி சமாளிப்பது என்று எண்ணி, தனது தந்தை அரசு சார்ந்த துறையில் தொடர்பு கொண்டிருந்ததால் போர்க்கலையை கற்று கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் நானும் கற்று கொண்டேன் என ஒருவாராக சொல்லி அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றான்.

🌟 மன்னருக்கு சீவகன் கூறியதில் நம்பிக்கை ஏற்படவில்லை. இவன் தன்னிடம் பொய் கூறுகின்றான் என்பதை புரிந்து கொண்டார். இருப்பினும் இவன் திறமை என்ன? என்பதை அறிந்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று எண்ணினார்.

🌟 சீவகனும் வாமனனாக இருந்து அரச குமாரர்களுக்கு பல வித்தைகளை கற்று கொடுக்க துவங்கினான். அதாவது அவர்கள் நால்வருடைய தனிப்பட்ட திறமைகள் என்னவென்று புரிந்து, அதில் அவர்களை தேர்ச்சி படுத்துவதற்கான யுக்திகளையும், முறைகளையும் தெளிவாக எடுத்து கூறி கற்று கொடுத்தான்.

🌟 அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை உடனுக்குடன் புரிந்து கொண்டு அதை எளிதாக கற்று கொண்டனர். நாட்களும் கடந்து ஓட துவங்கின. மாதமும் முடிந்தது.

🌟 ஒருநாள் அந்த நால்வரில் ஒருவனான கதம்பன், குருவே என்னை இங்கு பாருங்கள் என்றான். அதற்கு சீவகன் என்ன கதம்பா அங்கு என்ன செய்கின்றாய்? என்று கேட்டான்.

🌟 என்னுடைய வேலை கொண்டு நீண்ட நெடிய பனை மரத்தை சரியாக தாக்கி, ஒரே அடியில் இரண்டு பிளவுகளாக பிளந்து விட்டேன் என்று கூறி, தான் பிளவுப்படுத்திய பனை மரத்தை காட்டினான்.

🌟 நன்கு தேர்ச்சி அடைந்து விட்டாய் போலிருக்கிறதே கதம்பா! ஒரே அடியில் பனை மரத்தை பிளந்து விட்டாயே. முன்பை விட இப்பொழுது உன்னுடைய உடலிலும், குறி பார்க்கும் விதத்திலும் நல்ல தேர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது என்று கூறினான் சீவகன்.

🌟 அப்பொழுது அவன் கரத்தில் இருந்த வேலினை பார்த்தான். அதன் விளிம்புகள் மிகவும் கூர்மையாக இருந்தது. உன்னுடைய உடலிலும், ஆயுதத்திலும் பலங்களை அதிகப்படுத்தி கொண்டே இருக்கின்றாய் போல இருக்கிறது. பனை மரத்தில் மட்டுமல்லாது தென்னை மரத்திலும் இதே விதத்தில் செய்து பார் என்றும், உன்னுடைய திறமையை வளர்த்து கொண்டே இரு. அப்பொழுது தான் எதிரிகளை ஒரே அடியில் நம்மால் வீழ்த்த முடியும் என்றும் கூறி அவனை அடுத்த பயிற்சிக்கு அனுப்பினான் சீவகன்.

🌟 பின் அவ்விடத்திற்கு விசயன் வந்து, குருவே எனக்கு நீங்கள் சுழலும் பொறியில் எப்படி குறி பார்த்து வில் அடிப்பது என்று சொல்லி தருவதாக கூறினீர்கள். அந்த பயிற்சியை மேற்கொள்ள இப்பொழுது நான் தயாராக வந்திருக்கிறேன். அதை இப்பொழுது சொல்லி தருகின்றீர்களா? என்றான்.

🌟 அதற்கு சீவகன், ஆமாம்.. நீ இப்பொழுது தயாரான நிலையில் தான் இருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். சுழலும் பொறியில் வில் அடிப்பது என்பது ஒரு தனி கலையாகும். அதில் வில்லை எடுத்து, நாணில் அம்பை வைப்பது என்பதை தனித்தனியாக செய்ய முடியாது. ஒரு நொடியில் அதை செய்து உடனே இலக்கை அடைய வேண்டும். உனது கை, கண் மற்றும் இதயம் ஆகிய மூன்றும் சுழலும் இலக்கிலேயே இருக்க வேண்டும்.

🌟 முதலில் இதை அடி, பின்பு நான் அதை பற்றி உனக்கு சொல்கின்றேன் என்று கூறி தனது கையில் இருந்த ஒரு மாங்கனியை மேலே தூக்கி எறிந்தான் சீவகன்.


Share this valuable content with your friends