No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கஷ்டங்களை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு.. !!

Mar 18, 2023   Ramya   149    ஆன்மிகம் 


நினைத்ததை நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு...!!


🙏 பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

🙏 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பாகும். யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

விரதமுறை :

🙏 பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு பூசி சிவ நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் மாலை பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்துவிட்டு தரிசனம் முடிந்த பின்பு பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும்.

பிரதோஷ பலன்கள் :

🙏 தினந்தோறும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.

🙏 சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

🙏 பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

🙏 காராம்பசுவின் பாலால் அபிஷேகம் செய்து நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.

🙏 பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

🙏 பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.


Share this valuable content with your friends


Tags

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் கேஸ் அடுப்பு வெடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? kirakangal ஜாதகத்தில் சனி கிரகம் லக்னத்தை பார்த்தால் என்ன பலன்? good days ஆவணி மாதத்தில் சாமிக்கு நேர்த்திக்கடன் (கிடா வெட்டி) செலுத்தலாமா? வெள்ளத்தில் அடித்து செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்? வைகாசி மாத ராசிபலன்கள் PDF வடிவில்!! சித்திரை மாதத்தில் பெண் வயதிற்கு வரலாமா? தங்க தோடுகளை கனவில் கண்டால் என்ன பலன்? முதலில் பிறக்கும் ஆணும் பெண் தெய்வத்தை ஊஞ்சலில் வைத்து தலாட்டு பாடுவது போல் கனவு கண்டால் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 - PDF வடிவில் மாடிப்படிக்கட்டுக்கு அடியில் கழிவறை அமைக்கலாமா? மனோபயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட காரணமான வாஸ்து அமைப்புகள் !! சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? moon தாம்பூலம் தரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? dhinasari rasipalan 28.02.2020 in pdf format ஆகஸ்ட் 20