No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பங்குனி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்..!!

Mar 16, 2023   Ramya   192    ஆன்மிகம் 


பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்!

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. பங்குனி மாதத்தை வசந்த காலம் என்று அழைப்பர். பங்குனி மாதத்தில்தான் பெண்கள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு, கடவுள்களின் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திரம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன.

18.03.2023 (பங்குனி 4) விஜயா ஏகாதசி :

ஏகாதசி பெருமாளுக்குரிய நாள். பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா ஏகாதசி தினத்தில் ஏழு தானியங்களை ஒன்றன் மேல் மற்றொன்றைப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

19.03.2023 (பங்குனி 05), 03.04.2023 (பங்குனி 20) பிரதோஷம் :

சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள் பிரதோஷ தினமாகும். பிரதோஷ தினத்தில் கோவிலுக்கு சென்று சிவ வழிபாடு செய்தால் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

21.03.2023 (பங்குனி 07) சர்வ அமாவாசை :

இறந்த முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் "அமாவாசை". இன்று புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பாவங்கள் அனைத்தும் விலகி சகல நன்மைகளும் வந்து சேரும்.

22.03.2023 (பங்குனி 08) யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு) :

தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டு தினம் யுகாதி பண்டிகை. நான்கு நவராத்திரிகளுள் ஒன்றான வசந்த நவராத்திரியும் யுகாதி அன்றுதான் தொடங்குகிறது. இந்த வசந்த நவராத்திரி காலத்தில் அம்மனை வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

30.03.2023 (பங்குனி 16) ஸ்ரீராம நவமி :

ராமபிரான் அவதரித்த புண்ணிய தினமே ஸ்ரீராம நவமி. பூவுலகில் தீமையை அழிக்கவும், சரணாகதித் தத்துவத்தின் மகிமையை விளக்கவும் மகாவிஷ்ணு மண்ணுலகில் ராமனாக வந்து அவதரித்தார். ராம நவமி அன்று விரதமிருந்து பானகம், நீர்மோர் ஆகியன படைத்து ராமபிரானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

01.04.2023 (பங்குனி 18) ஆலமகீ ஏகாதசி :

ஏகாதசி, பெருமாளை வணங்குவதற்கு உகந்த நாளாகும். பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு ஆலமகீ ஏகாதசி என்று பெயர். இன்றைய தினத்தில் விரதமிருந்து, நெல்லி மரத்தடியில் பரசுராமர் படத்தை வைத்து பூஜை செய்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். பசு தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும்.

05.04.2023 (பங்குனி 22) பௌர்ணமி :

பௌர்ணமியன்று செய்யப்படும் அம்பிகை வழிபாட்டுக்கு பலன்கள் அதிகம். பௌர்ணமி இரவு நேரத்தில் சிவ வழிபாடு செய்த பிறகு கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். உடலும், மனமும் ஆரோக்கியமாகும்.

05.04.2023 (பங்குனி 22) பங்குனி உத்திரம் :

12வது மாதமான பங்குனி மாதத்தில் பௌர்ணமியுடன் 12வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம். பங்குனி உத்திரத்தில்தான் சிவன் - பார்வதி, முருகன் - தெய்வானை, ராமன் - சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன.


Share this valuable content with your friends


Tags

மாவிலைகளை வீட்டு வாசலில் எப்போதும் கட்டலாமா? வீட்டில் செய்வினை இருப்பதை எப்படி அறிவது? மயில் தோகையை விரித்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாத செயல்கள் எவை?< இஷ்டி காலம் என்றால் என்ன? கிழக்கு பகுதியில் உயரமான மரங்கள் இருப்பது 01.06.2019 Rasipalan in pdf format!! விநாயகருக்கு மிகவும் உகந்த திதி weekly rasipalan in pdf format மு.கருணாநிதி தினசரி ராசிபலன்கள் (28.08.2020) தாரகாக்ஷன் மற்றும் கமலாக்ஷன் saturday 04.11.2019 Rasipalan in pdf format!! காமாட்சி விளக்கை மகளுக்கு தானம் தரலாமா? Horoscope for Tuesday - 26.06.2018 கேமசரி கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் 16.03.2020 today rasipalan in pdf format எனக்கு ஒருவர் பணம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?