No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பணவரவை கூட்டும் வியாழக்கிழமை விரதம்.... எப்படி செய்வது?

Mar 08, 2023   Ramya   208    ஆன்மிகம் 


வியாழக்கிழமையின் சிறப்புகள்...!!


🌟 குரு பகவானின் அருள் நிறைந்திருக்கக்கூடிய நாள் தான் வியாழக்கிழமை. இந்நாள் கல்வி உட்பட பல கலைகளை கற்றுக் கொள்வதற்கும், அதனை தொடங்குவதற்கும் அற்புதமான நாள் ஆகும்.

🌟 பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் நவகிரகங்களில் ஒருவர் ஆவார். இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர்.

🌟 அதனால் தான் இவருக்கு வியாழக்கிழமை வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

🌟 ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை கடைபிடித்தால் குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

எப்படி விரதம் இருப்பது?

👉 வியாழக்கிழமையன்று அதிகாலையிலே எழுந்து குளித்து, மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமலும், அருந்தாமலும் இருக்க வேண்டும்.

👉 அருகிலுள்ள கோயிலின் நவகிரக சன்னதிக்கு சென்று குரு பகவானுக்கு சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

👉 பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

👉 மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகளை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

👉 மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது.

👉 இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

விரதத்தின் பலன்கள் :

💫 குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும்.

💫 சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரகதோஷம் இருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பதால் தோஷங்கள் நீங்கும்.

💫 தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் செல்வ வளம் பெருகும்.

💫 மேலும் எதிர்பார்க்காத சிறந்த வாழ்க்கை உண்டாகும் என்பது நம்பிக்கை.


Share this valuable content with your friends