No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புண்ணியங்களை தரும் மாசி மகம்… புனித நீராடல் ஏன்?

Mar 06, 2023   Ramya   219    ஆன்மிகம் 


மாசி மகம்... மாசி பௌர்ணமி...!


🌟மாதங்களில் மகத்தான மாதம் மாசி மாதம். மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன.

மாசி பௌர்ணமி :

🌟மாசி பௌர்ணமி அன்று தான் அன்னை உமையவள் காளிந்தி நதியில் தாமரை மலரில் சங்கு வடிவத்தில் தோன்றினாள். சிவபக்தனான தட்சன் சங்கினைத் தொட்டவுடன் குழந்தையாக மாறி தாட்சாயிணி என்ற பெயரில் தட்சனின் மகளாக வளர்ந்தாள். எனவே மாசி பௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வில் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.

🌟வள்ளலாளன் என்ற திருவண்ணாமலை அரசனுக்கு அண்ணாமலையார் அரசனின் வேண்டுகோளின்படி மாசி பௌர்ணமி அன்று தான் நீத்தார் கடன் செய்தார். அதனால் மாசி பௌர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. மாசி பௌர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் மாசி பௌர்ணமி மாசி 23ஆம் தேதி (07.03.2023) செவ்வாய்க்கிழமையன்று வருகிறது.

மாசி மகம் :

🌟மாசி மக நன்னாளில், நம்மால் முடிந்த அன்னதானம் அல்லது பொருள்தானம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், வாழ்வில் சத்விஷயங்கள் நம்மை வந்தடையும். மனதில் இருந்த குழப்பமும், பயமும் நீங்கும். மங்கள காரியங்கள் இனிதே நடந்தேறும். இந்த வருடம் மாசி மகம் மாசி 22ஆம் தேதி (06.03.2023) திங்கட்கிழமையன்று வருகிறது.

🌟பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசி மகம். இதனால், மாசி மக தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும்.

🌟மாசி மகத்தன்று பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். மாசி மகம் ஸ்நானம் செய்வோருக்கு சிவனும், விஷ்ணுவும் உரிய பலன் தருவார்கள். மாசி மக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணத்தை படிக்கலாம் அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.


🛀நீராடும்போது ஒருமுறை நீராடி எழுந்தால் பாவங்கள் விலகும்.

🛀இரண்டாம் முறை நீராடி எழுந்தால் தேவலோகத்தில் வீற்றிருக்கும் பெருமை கிடைக்கும்.

🛀மூன்றாம் முறை நீராடி எழுந்தால் நீராடுபவர் செய்த புண்ணியத்திற்கு எல்லையே இல்லை.

🌟பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகிறது. எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசி மகம். இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

🌟மாசி மகத்தன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நம் குலத்தைக் காக்கும், வாழ்வாங்கு வாழ வைக்கும், வம்சம் வாழையடி வாழையென தழைத்து வளர செய்யும்.

🌟இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல தோஷங்களும் நீங்கும்.


Share this valuable content with your friends


Tags

அதிகாலை கனவில் காவல் அதிகாரியை கண்டால் என்ன பலன்? confuse 31.01.2019 Rasipalan in PDF Format !! 08.10.2020 rasipalan in pdf format வெள்ளிக்கிழமையில் முடி வெட்டலாமா? கேது பலன் எப்படி இருக்கும்? குழந்தைகளுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பகைவருடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் ஒரு ரயில் விபத்திலிருந்து நான் உயிர் தப்பிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மழை நீர் குழாயை ஈசானிய மூலை வழியாக கொண்டு செல்லலாமா? மயானம் அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன? இறந்தவர் வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? guru peyarchi palangal விநாயகர் சிலை உடைந்து விழுவது 10-ல் புதன் மற்றும் சுக்கிரன் வக்ரமாக உள்ளது. இதற்கு என்ன பலன்? purattaasi month raasipalangal in PDF Format!! Maasi month rasipalan in PDF Format!! gayaththiri manthiram பவதத்தன் சிம்ம லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?