No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மதம் பிடித்த யானையை அடக்கிய சீவகன்..!!

Mar 02, 2023   Ramya   164    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மதம் பிடித்த யானையை அடக்கிய சீவகன்..!!

🌟 சற்று தொலைவில் சீவகன் கூட்ட நெரிசலில் அகப்பட்டிருந்த ஒரு முதியவரை தூக்கி கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தான்.

🌟 அந்த இடத்தில் சீவகனை கண்ட மாலையோ, உடனே சீவகனின் அருகில் சென்று குணமாலையின் நிலையை கூறி உதவ உடனே வாருங்கள் என்று வேண்டி நின்றாள்.

🌟 சீவகன் தன்னுடைய தோழனை அழைத்து, முதியவரை அவனிடம் ஒப்படைத்து விட்டு உனது தலைவி எங்கே இருக்கின்றாள்? என்று வினவினான்.


🌟 மாலையும், தன் தலைவி இருக்கும் இடத்தை கை நீட்டி காண்பிப்பதற்குள் மதம் பிடித்த யானையானது பல்லக்கின் அருகில் வர துவங்கியது. யானை பல்லக்கின் அருகில் வந்து கொண்டிருப்பதை சீவகனும், மாலையும் பார்த்தனர்.

🌟 ஐயோ இன்னும் சிறு நொடியில் பல்லக்கு நொறுங்கி விடுமே! ஐயோ குணமாலை நான் தவறு செய்துவிட்டேன் என்று மாலை கதறி கொண்டிருந்தாள்.

🌟 அப்பொழுது யானை பல்லக்கின் அருகில் வந்து பல்லக்கை தனது துதிக்கையால் தூக்க அதிலிருந்து குணமாலை கீழே விழுந்தாள்.

🌟 மதம் பிடித்த யானை என்ன செய்யும்? என்று தெரியாமலும், யானையை அவ்வளவு அருகில் கண்டதும் என்ன செய்ய வேண்டும்? என்பதை மறந்தும் அவ்விடத்திலேயே குணமாலை நின்றிருந்தாள்.

🌟 மதம் பிடித்த யானையை பார்த்ததும் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த குணமாலையை, யானை தனது துதிக்கையால் வளைத்து இறுக பிடித்தது.

🌟 இனி காலம் தாமதித்தால் யானையின் பிடியில் சிக்கியவள் பாதிக்கப்படுவாள் என்று சிந்தித்த சீவகன் கணப்பொழுதில் தனது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கழற்றி யானையின் நெற்றியை நோக்கி நேராக வீசினான்.

🌟 பலம் கொண்ட தன்னை குண்டலத்தால் எதிர்த்த எதிரி யார்? என்று யானை திருப்பி சீவகனை பார்க்க, அப்பொழுது யானையின் பிடியில் சிக்கி கொண்டிருந்த குணமாலையின் முகத்தை சீவகன் பார்த்தான்.

🌟 யானையின் பிடியில் சிக்கி கொண்டிருந்த குணமாலையை பார்த்தவுடன் மாலையோ ஐயோ குணமாலை என்று கதறினாள்.

🌟 சீவகன் தனது நண்பனான நந்தட்டனிடம் நண்பா நீ மாலையை தெருவின் அந்த பக்கத்திற்கு அழைத்து செல். நான் யானையின் கவனத்தை திசை திருப்பி யானையின் பிடியிலிருக்கும் மங்கையை விடுவிக்கின்றேன். அப்பொழுது நீ பின்புறமாக வந்து அந்த மங்கையை காப்பாற்றி தெருவின் அந்த பக்கத்திற்கு அழைத்து சென்று விடு. அதன் பிறகு யானையை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து செல்கின்றேன் என்று கூறிவிட்டு யானையை நோக்கி ஓடினான்.


🌟 தன்னை நோக்கி, தன்னை தாக்கிய எதிரி வந்து கொண்டிருக்கின்றான் என்பதை பார்த்த யானையும், அவனை எதிர்த்து தாக்க சீவகனை நோக்கி ஓடி வந்தது. அதன் ஓட்டத்திற்கு தடையாக இருந்த குணமாலையை துதிக்கையின் பிடியை தளர்த்தி தூர வீசியது.

🌟 யானையின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத சீவகனோ, குணமாலையின் நிலை என்ன ஆயிற்று? என்று பதறிய வண்ணமாக யானையின் பிடிக்கு அகப்படாமல் யானையின் பின்பக்கத்திற்கு சென்று குணமாலையின் நிலையை பார்த்தான்.

🌟 நல்ல வேளையாக குணமாலை விழுந்த இடம் பூக்கள் யாவும் விற்பனைக்காக எடுத்து வைக்கப்பட்ட கட்டிலாக இருக்க சிறு சிறு அடிகளுடன் அவளும் பிழைத்தாள்.

🌟 அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்பதை புரிந்து கொண்ட சீவகன் ஏதோ புதிதாக பிறந்தது போல உணர்ந்தான். மதம் பிடித்த யானை மீண்டும் அவனை பின் தொடர இனியும் பொறுமை காத்தல் கூடாது என்பதை முடிவு செய்து கொண்டு யானையை நோக்கி மீண்டும் ஓடினான்.

🌟 கீழே விழுந்த குணமாலைக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை அறிந்து கொண்டதும், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், நேராக ஓடாமல் சற்று வளைந்து சென்று காளை வண்டியின் மீது ஏறி, யானையின் மேல் அமர்ந்து மத்தகத்தை (யானையின் நெற்றியை) பிடித்தான்.

🌟 யானையும் தன்னுடைய எதிரி தன் மீது அமர்ந்திருக்கின்றான் என்பதை உணர்ந்து தனது உடலை பலவாறாக உதறியது. யானை என்ன செய்தும் சீவகனை அப்புறப்படுத்த முடியாமல் நின்றது. ஆனால் சீவகனோ யானையின் உடல் அசைவுக்கு ஏற்ப அசைந்து அவன் பிடியை தளர்த்தாமல், யானையின் காதருகில் சில மந்திரங்களை கூற துவங்கினான்.

🌟 சீவகன் மந்திரம் கூற கூற யானையின் கோபமானது படிப்படியாக குறைய துவங்கியது. பின்பு சிறிது நேரத்திற்குள் யானை அமைதி அடைந்தது. பிறகு அங்குசம் (யானையை கட்டுப்படுத்த யானையின் பாகன் பயன்படுத்தும் பொருள்) கொண்டு அடக்கி வைத்தான்.

🌟 கீழே விழுந்திருந்த குணமாலையை நந்தட்டன் அருகில் சென்று தூக்கினான். அப்பொழுது குணமாலைக்கு என்ன ஆயிற்று? என பதறிய மாலை அவள் அருகில் வந்து நல்லவேளை யானையின் வெறியில் இருந்து தப்பித்து கொண்டீர்கள்.. எல்லாம் நன்மைக்கே! என்று கூறிய வண்ணமாக இருந்தாள்.

🌟 அப்பொழுது குணமாலையோ, தன்னை காப்பாற்றிய சீவகனை பற்றி எண்ணி பார்த்து கொண்டிருந்தாள். அதாவது, நல்லவேளையாக சுரமஞ்சரி நம்முடன் இப்பொழுது வரவில்லை. ஒருவேளை வந்திருந்தால் இந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு தனக்கு கிடைக்காமலே போயிருக்கும் என்று எண்ணி, தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.

🌟 கீழே விழுந்ததால் ஏற்பட்ட சிறு சிறு காயங்களை கண்ட குணமாலை ஏதோ போருக்கு சென்று வீர தழும்புகள் பெற்றது போல ஒருவிதமான வெட்கத்துடன் புன்னகைத்து கொண்டிருந்தாள். மாலையோ குணமாலைக்கு காயம் ஏற்பட்டதை எண்ணி துயரம் கொண்டாள்.


🌟 சீவகன் தான் அடக்கிய யானையின் மீது அமர்ந்து கொண்டு, அரசருடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய யானைகளின் கூட்டங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, இந்த யானையின் பாகன் யார்? என்று வினவினான்.

🌟 அப்பொழுது அந்த யானையின் பாகன் மறைவான பகுதியில் இருந்து வெளிவர, வீட்டில் அடங்காத பிள்ளைகளை ஊரார் அடக்கி விடுவார்கள். அதனால் ஏற்படும் இழப்புகள் சற்று அதிகமாக இருக்கும். இனியும் இது போன்ற தவறுகள் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள் என்று கூறிவிட்டு யானையை பாகனிடம் ஒப்படைத்தான்.


Share this valuable content with your friends


Tags

17.06.2019 Rasipalan in pdf format!! அக்டோபர் 04 23.01.2019 Rasipalan in PDF Format!! லிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (17.06.2020) எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆதாயம் மேம்படும்? சார்லஸ் டார்வின் ஜுலை 09 கோவிலில் இருக்கும்போது பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அக்னி நட்சத்திர காலத்தில் புது வீடு கட்டும் பணியை தொடங்கலாமா? ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? april month rasipalan in pdf format பட்டாம் பூச்சி பறப்பது போல் கேது திசையில் திருமணம் செய்யலாமா? நீர் வீழ்ச்சியை கனவில் கண்டால் என்ன பலன்? பச்சைக்கிளி கை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தொழில் குரங்கை கனவில் கண்டால் என்ன பலன்? mullai