No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் நண்பனானான் சுதஞ்சணன்..!!

Mar 01, 2023   Ramya   201    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனின் நண்பனானான் சுதஞ்சணன்..!!

🌟 சீவகனோ, இங்கு நிகழ்ந்த ஆச்சரியத்தை கண்டு நிகழ்காலம் வர இயலாமல் ஏதோ தேவலோக விந்தைகள் நிகழ்வது போல திகைத்து நின்று கொண்டிருந்தான். பின்பு அந்த தேவன் கூறிய கூற்றுக்களினால் மாயங்களில் இருந்து விடுபட்டு, நிகழ்காலம் வந்த சீவகன் ஆமாம் நீங்கள் யார்? என்று வினவினான்.

🌟 என்னுடைய பெயர் சுதஞ்சணன். நான் சங்கவெண் மலையில் உள்ள சந்திரோதயம் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த தேவன் ஆவேன். செய்த தவறுக்கு தண்டனையாக நாயாக பிறவி எடுத்தேன்.

🌟 இப்பொழுது நீர் கூறிய மோட்ச மந்திரத்தின் காரணமாக என்னுடைய சாபங்கள் யாவும் நீங்க பெற்று, மீண்டும் தேவனாக மாறினேன். தனக்கு ஏற்பட்ட இந்த நிலையிலிருந்து விடுவித்த உமக்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

🌟 உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்? அதை நான் கண்டிப்பாக செய்கின்றேன். இந்த நொடியில் இருந்து நீங்கள் தான் என்னுடைய எஜமானர். நான் உங்களுடைய அடிமை என்றார் சுதஞ்சணன்.

🌟 ஓ! எனக்கும் ஒரு அடிமை இருக்கின்றாரா? என்னிடத்தில் யாவரும் அடிமையாக இருப்பது எனக்கு பிடிக்காதே... எனக்கு அடிமையாக நீங்கள் இருக்க வேண்டாம். ஆனால் எனக்கு நண்பனாக இருங்கள். எப்பொழுது உங்களுடைய உதவி எனக்கு தேவைப்படுகின்றதோ அப்பொழுது உங்களிடம் நான் கேட்கின்றேன். அப்பொழுது அந்த உதவியை எனக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினான் சீவகன்.

🌟 உங்களுக்காக என்னுடைய உயிரையும் நான் கொடுப்பேன். உங்களுக்கு எப்பொழுது உதவி தேவைப்படுகின்றதோ அப்பொழுது நான் கண்டிப்பாக அவ்விடத்தில் இருப்பேன் என்றார் சுதஞ்சணன்.

🌟 நான் பார்த்த மானிடர்களில் நீர் வித்தியாசமாக இருக்கின்றாய். ஏனென்றால்? எம்மால் செய்ய முடியாத காரியங்கள் எதுவும் இவ்வுலகில் இல்லை. அப்படிப்பட்ட என்னை வைத்து என்ன வேண்டுமானாலும் நிறைவேற்றி கொள்ளலாம்.

🌟 ஆனால் அவ்விதம் நீர் எதுவும் செய்யாமல் இருக்கின்றாய். அது மட்டுமல்லாமல் அடிமையாக இருக்கின்றவனை நண்பனாக அழைக்கின்றாயே! உன்னுடைய குணம் மிகவும் மென்மையானதாகும். நீர் எப்பொழுதும் என்னிடத்தில் உதவியை எதிர்பார்க்க மாட்டாய். ஆகவே நான் இந்த கணத்திலிருந்து உங்களை தொடர்ந்து வருவேன். உங்களுக்கு எந்த கவலையும் இருக்க வேண்டாம் என்றார் சுதஞ்சணன்.

🌟 சுதஞ்சணன் கூறியதை கேட்ட சீவகன், எனக்கு தான் இப்பொழுது எந்தவிதமான கவலையும் இல்லையே. என்னை நீங்கள் எப்பொழுதும் பின் தொடர்ந்து வந்தால் எனக்கு ஒருவிதமாக இருக்கும். ஆகவே என்னை பின் தொடராதீர்கள்.

🌟 எனக்கு எப்பொழுது உதவி தேவைப்படுகின்றதோ அப்பொழுது நான் உங்களை கண்டிப்பாக அழைக்கின்றேன். இப்பொழுது தான் நீங்கள் விமோசனம் அடைந்துவிட்டீர்களே! உங்களது நகரத்தில் இருப்பவர்கள் எப்படி இருக்கின்றார்கள்? என்பதை கண்டு மீதம் இருக்கும் உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். இதுவே என்னுடைய இப்போதைய கட்டளையாகும். எனக்கு தேவைப்படும் பொழுது உங்களை மனதளவில் எண்ணுகின்றேன். அப்பொழுது நீங்கள் வந்து தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று கூறினான் சீவகன்.

🌟 எஜமானரின் கட்டளையை என்னால் மீறி செயல்பட முடியாது. ஆகவே உங்கள் விருப்பப்படியே இப்பொழுது நான் இவ்விடத்திலிருந்து செல்கின்றேன். ஆனால் எனது மனம் உங்களை சுற்றியே இருக்கும். நீங்கள் ஒரு நொடி நினைத்தாலும் நான் அவ்விடத்தில் தோன்றி விடுவேன் என்று கூறி சீவகனிடமிருந்து விடைபெற்று யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் அரூபமாக அவ்விடத்தில் இருந்து மறைந்து சென்றார் சுதஞ்சணன்.


🌟 சீவகனின் நண்பனான நந்தட்டன், நமது ஊரில் அடிக்கடி ஆச்சரியம் நிறைந்த பல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நாம்தான் எதையும் கவனிக்காமல் ஏதோ குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல நேராக சென்று கொண்டே இருக்கின்றோம். ஒருவேளை உணவுக்காக சுற்றி திரிந்து கொண்டிருந்த ஒரு சாதாரண நாய் திடீரென ஒரு தேவனாக மாறுகின்றது. என்ன ஒரு ஆச்சரியம் பாருங்களேன்! என்று நண்பர்களிடத்தில் கூறிய வண்ணமாக இருந்தான்.

🌟 இதை கேட்ட சீவகனோ, எல்லாம் மோட்ச மந்திரத்தின் மகிமை தான். அருகனை மனதளவில் நினைத்து, அவன் மீது நம்பிக்கை கொண்டு மந்திரத்தை ஜெபித்தால் செம்பே பொன்னாகும், நாய் தேவனாக மாறுவதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை என்று கூறினான்.

🌟 இவர்கள் இவ்விதமாக பேசி கொண்டிருந்த பொழுது மக்கள் அனைவரும் ஏதோ நிகழக்கூடாதது நிகழ்ந்துவிட்டது போல எட்டுத்திக்கும் சிதறடித்து ஓடி கொண்டிருந்தனர்.


Share this valuable content with your friends


Tags

சாமியார்கள் வீட்டினுள் வந்து ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? kunanalankal samy வீட்டில் உறவினர்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? answer பூராடம் நட்சத்திரம். தற்போது வாகனம் வாங்கலாமா? காது குத்தாமல் திருமணம் செய்யலாமா? கழுத்தில் இருக்கும் மணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11.02.2023 ராசிபலன் 22.07.2021 Rasipalan in PDF Format!! lakshmi devi கோவிலில் கொடுக்கும் பூவை தலையில் வைக்கலாமா? மார்ச் 23 புரட்டாசி மாதத்தில் புதிய இடம் வாங்கலாமா? புதன் பகவான் வழிபாடு நீதிமன்றத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?முருகப்பெருமானை கனவில் கண்டால் என்ன பலன்? அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை மே 16 08.09.2020 Rasipalan in PDF Formar!! 10.06.2019 rasipalan in pdf format