No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - தேவனாக மாறிய நாய்.. எப்படி நிகழ்ந்தது?

Mar 01, 2023   Ramya   180    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... தேவனாக மாறிய நாய்.. எப்படி நிகழ்ந்தது?

🌟 மக்களை அடிக்க வந்த குடிகாரனை சீவகன் கட்டுப்படுத்தினான். எதற்காக இவர்களை தாக்க இப்படி ஓடி வந்து கொண்டிருக்கின்றாய்? என்ன நிகழ்ந்தது? என்று சொல் என்றான் சீவகன்.

🌟 குடிகாரனும் தான் அன்பாக வளர்த்து வந்த நாயை இந்த பகுத்தறிவு படைத்த மனிதர்கள் கொன்று விட்டார்கள் என்று நிகழ்ந்த அனைத்தையும் கூறினான்.

🌟 நிகழ்ந்த அனைத்தையும் அறிந்து கொண்ட சீவகன், குடிபோதையில் இருந்தாலும் அவன் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கின்றதே. ஒரு நாய் இறைவனுக்கு வைத்திருந்த உணவை உண்டது என்றால் அந்த நாயை விரட்டி இருக்கலாம் அல்லது அந்த நாய் உண்ட பகுதியை அகற்றிவிட்டு, மற்றவர்கள் உண்ணுவதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அந்த நாயை கொலை செய்துவிட்டீர்களே? நீங்கள் எவ்வளவு படித்திருந்தும் என்ன பயன்? உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா? என்று சீவகன் கோபத்தோடு கேட்டான்.

🌟 சீவகன் கூறியதை கேட்டதும் தான் அங்கிருந்தவர்கள், தாங்கள் செய்த தவறினை உணர்ந்து, செய்த செயலுக்காக மனம் வருந்தி எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

🌟 இதற்கு மேல் உங்களிடம் என்ன சொல்லி என்ன பயன்? என்று கூறிவிட்டு அந்த நாய் எங்கே இருக்கின்றது என்று வினவினான்.

🌟 அங்கிருந்தவர்கள் நாய் இருக்கும் இடத்தை கூற, சீவகன் விரைவாக சென்று அந்த நாய் அடிபட்டிருக்கும் இடத்தை அடைந்தான். அவ்விடத்தில் அவன் கண்ட காட்சி மிகவும் கொடுமையாக இருந்தது.

🌟 கல்வி கற்று பகுத்தறிவில் சிறந்து விளங்கும் இந்த மனிதர்கள் எது அறம்? என்று தெரியாமல் தன்னுடைய தேவைக்காக எதையும் செய்யும் மிருகத்தை விட மிக மோசமாக செயல்பட்டதை எண்ணி அருவருத்து நின்று கொண்டிருந்தான்.

🌟 அங்கே ஏதும் அறியாத நாயோ தன்னுடைய கடைசி மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டிருக்க, என்ன செய்வது? என்று புரியாமல் அதன் அருகில் சென்றான்.


🌟 உடல் முழுவதும் இரத்தம் வெளியேறிய வண்ணமாக, அவர்களிடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்து நடந்ததில், தெருவெல்லாம் நாயின் இரத்தம் சிந்தி இருந்தன. நாயே! நீ ஏன் இந்த ஈனப்பிறவியில் பிறந்திருக்கின்றாய்? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பிறப்பில்லாமல் மோட்சத்தை அளிக்கக்கூடிய மந்திரத்தை நான் கூறுகின்றேன். நீ அதை கேட்டு உன்னுடைய கடைசி மூச்சை விட்டாய் என்றால் நிச்சயம் அடுத்த பிறவியிலாவது உயர்ந்த பிறப்பாக பிறப்பாய் என்று கூறி விட்டு, சக்தி வாய்ந்த மோட்சத்தை அளிக்கும் மந்திரங்களை கூற துவங்கினான்.

🌟 சீவகன் மோட்சத்திற்கான மந்திரத்தை கூற நாயின் கண்ணில் ஒளியின் தன்மை அதிகரிக்க துவங்கியது. அணையும் விளக்கு எவ்விதம் பிரகாசமாக எரியுமோ, அதே போல அந்த நாயினுடைய கண்களும் பிரகாசமாக இருந்தன. கணப்பொழுதில் கண்ணில் காணப்பட்ட பிரகாசம் நீங்கி மரணித்தது.

🌟 நாயின் மரணத்தினால் சீவகன் கண்ணில் இருந்து விழிநீர் வெளிப்பட துவங்கின. ஆனால் அந்த நாய் இருந்த இடத்தில் ஒரு அதிசயமும் நிகழ தொடங்கியது. நாயின் உடலில் இருந்து ஒருவிதமான பிரகாச ஒளியானது கிளம்பியது.

🌟 அந்த ஒளியானது அருகில் இருக்கக்கூடிய பொருட்கள் எதுவும் தெரியாத அளவில் இருந்தது. அங்கிருந்த அனைவரின் கண்களும் கூசும் அளவில் என்ன நிகழ்கின்றது? என்று புரியாமல் திகைத்து நின்றனர்.

🌟 சிறிது நேரத்தில் அந்த நாய் இருந்த இடத்தில் ஏற்பட்ட ஒளியின் பிரகாசமானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அங்கே ஒரு தேவன் தோன்றினார். அவ்விடத்தில் தோன்றிய தேவன், சீவகனை பார்த்து தனக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கி மோட்சமளித்த சீவகனுக்கு நன்றி என்றும், நீர் எனக்கு தந்தை போல என்றும் கூறினார்.


Share this valuable content with your friends