No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதன்கிழமை... பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?

Mar 01, 2023   Ramya   230    ஆன்மிகம் 


புதன்கிழமை செய்ய வேண்டியவை..!!

🌟நாம் பல வேலைகள் செய்தாலும், சில தினங்களில், சில வேலைகளை குறிப்பிட்டு செய்துவந்தால் நமக்கு நன்மை நடக்கும்.

🌟அந்த வரிசையில் புதன்கிழமை அன்று, அவரவர் வீட்டில் பெண்கள் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால், நல்லது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.


புதன்கிழமையில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்:


🥗சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களை புதன்கிழமை அன்று புதியதாக நிரப்பி வைத்து வந்தால் இல்லங்களில் நவதானியங்கள் எப்பொழுதும் குறையாமலிருக்கும்.

🥣சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் அல்லது பூஜைக்கு பயன்படுத்தும் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றினை புதன்கிழமைகளில் வாங்கி வைத்து பயன்படுத்தினால் அதன் மூலம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.

🚪புதிய பொருட்கள் வாங்குவது என்றாலும் புதன்கிழமையில் வாங்குங்கள். புதன்கிழமையில் பொருட்கள் வாங்குவதால் உங்கள் வீடுகளில் அதிக பொருட்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

👑தங்க நகை வாங்குவதாக இருந்தாலும் புதன்கிழமை குளிகை நேரங்களில் வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் எப்பொழுதும் பொன், பொருள் குறையாமல் அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும்.

புதன்கிழமை என்ன சமைக்கலாம்?


🌿புதன்கிழமை அன்று நம்முடைய வீடுகளில் கீரை சேர்த்த பதார்த்தங்களை சமைக்கலாம்.

🌿கீரை கூட்டு, கீரை பொரியல், செய்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக, முருங்கைக் கீரை பொரியல் செய்வது நல்லது. துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு போட்டு கீரை கூட்டை செய்து கொள்ளலாம்.

🍃உங்களால் முடிந்தால் வேப்பம்பூவை சிறிதளவு எடுத்து சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். வேப்பம்பூவை 2 பறித்து எண்ணெய்யில் போட்டு வதக்கி, ரசத்தில் கொட்டி விட்டால் கூட போதும்.

🥒இதேபோல் பாகற்காயை சமைப்பது மிகவும் நல்லது. பாகற்காய் தொக்கு செய்யும் போது, சில பேர் அதில் வெங்காயம் சேர்ப்பார்கள். புதன்கிழமை அன்று, உங்கள் வீட்டில் பாகற்காய் செய்தால், அதில் வெங்காயம் சேர்க்காமல் சமைப்பது மிகவும் நல்லது.

🥘வெந்தயம் சேர்த்த குழம்பு செய்யலாம்.

🥘பாசிப்பருப்பு பாயசத்தை சமைக்கலாம்.

🥛 புதன்கிழமை அன்று முடிந்தவரை பால் சேர்த்து எந்த ஒரு பொருளையும் சமைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

🍌புதன்கிழமை பச்சை வாழைப்பழத்தை வீட்டிற்கு வாங்கி வருவது மிகவும் சிறப்பு.

🍌புதன்கிழமை அன்று, பூஜை அறையில் பச்சை வாழைப்பழத்தை நிவேதனமாக இறைவனுக்கு படைத்து, தீபமேற்றி வழிபடும் பட்சத்தில் நம்முடைய இல்லறம் என்றும் சுபிட்சமாக இருக்கும்.

புதன்கிழமை என்றால், மேல் குறிப்பிட்டுள்ள பொருட்களை மட்டும் தான் வீட்டில் சமைக்க வேண்டும் என்றல்ல. இந்த பொருட்களில் உங்களால் சமையலில் ஏதாவது ஒன்றை மட்டும் சேர்க்க முடிந்தால் கூட அதுவே போதும்.


Share this valuable content with your friends


Tags

சாய்பாபா பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மே திருமண பொருத்தத்தில் தினப்பொருத்தம் முக்கியமா? என்னை யாரோ கொலை செய்ய வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Weekly rasipalan in pdf format சமுதாயத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள் இவர்களே! எலும்பு உடைவது போல் கனவு வீட்டு வேலை பாதியில் நிற்ப்பதற்கு வாஸ்து தான் காரணமா? சுக்கிரனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்? virussagam உயிர்பிழைத்த சீதத்தன் திருநங்கை என்னை பார்த்து சபிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? new engine alatchiyam reception hall வழிபாடு நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா? ஜனவரி 22 எம்.பி.என்.பொன்னுசாமி