No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய் தோஷம் என்ன செய்யும் ?

Jun 21, 2018   Dharani   516    ஆன்மிகம் 

முதலில் செவ்வாய் கிரகத்தை (பகவானை) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?

???? ஜாதகத்தில் இளைய சகோதர தன்மையை அறியக்கூடியது. போர்க்குணம் கொண்டது. ஆண் தன்மை உடையது. இவரை "மங்களக்காரகன்" என்று அழைப்பதுண்டு. இவருடைய அதிதேவதையாக சுப்ரமணிய கடவுளை நாம் வணங்குகிறோம். இது வீரத்தின் வெளிப்பாடு. எதையும் தலைமை தாங்கும் பண்பு. அடுத்தவரிடம் பணிந்து போக தெரியாது. இப்படி இவருடைய தன்மையை கூறிக்கொண்டே போகலாம்.

தோஷம் என்று கூறக்கூடிய நிலைப்பாடு :

???? இப்படிப்பட்ட குண இயல்புகளை உடைய ஆணோ, பெண்ணோ இருந்தால் அனுசரித்து செல்லக்கூடியவராக, எதிர்பாலினர் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இவருக்கு ஈடு கொடுப்பவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பிரச்சனை ஒன்றுமில்லை. இல்லையென்றால் சண்டை சச்சரவு, பிரிவினை, கருத்து வேறுபாடு, ஈகோ பார்ப்பது இப்படியான பிரச்சனைகள் உருவாகும்.

???? மேற்கூறிய இந்த நிலை தான் "செவ்வாய் தோஷம்" என்று கூறப்படுகிறது. இந்த மாதிரியான குண இயல்புகள் உடையவர்களை அதே மாதிரியான குண இயல்புகளை உடைய ஒருவரோடு இணைத்து வைக்கும் போது அது "தோஷ சாம்யம்" என்று கூறக்கூடிய சமநிலைபாடு வந்துவிடும். அதனால் வரக்கூடிய இன்னல்களிலிருந்து மீண்டு தம்பதியர் இருவரும் ஒரு நல்ல மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.

???? அதனால்தான் செவ்வாய் தோஷம் உடைய இருபாலரை இணைத்து வைக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பரிகார செவ்வாய் என்று கூறக் கூடிய நிலைப்பாடு :

???? செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள அனைத்து ஜாதகமுமே மேற்கூறிய நிலைப்பாட்டில் வருவது தான். இதில் அதிக பாதிப்பு என்று கூறக்கூடிய பாவகத்தில் (7மிடம் ஆணுக்கு, 8மிடம் பெண்ணுக்கு) இருக்க கூடிய ஜாதகத்தை பரிகார செவ்வாய் என்ற ஜோதிடரால் கூறக்கூடிய ஜாதகத்தை இணைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கல்யாணத்திற்கு பிறகு ஜாதகர் (ஆண்) வெளிநாட்டில் வேலை செய்பவராக இருந்தால் தோஷ நிலை குறைந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் சேர்ந்து வாழ முடியும். இதை ஒரு பரிகாரமாக கூட எடுத்துக் கொள்ளலாம். அதற்காக செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு வெளிநாடு செல்லக்கூடிய மாப்பிள்ளைக்கு தான் பெண் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் கணவன் மனைவி இருவரும் புரிந்து கொண்டு நான் பெரியவனா? நீ பெரியவளா ? என்ற ஈகோவை விட்டு வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக திகழும்.

???? வழிபாடாக செவ்வாயின் அதிதேவதையான முருகப்பெருமானை வழிபட்டும், தினமும் காலை வேளையில் கந்த சஷ்டி கவசம் கேட்பதும் மாலையில் கந்த புராணம் படிப்பதும் நல்ல ஒரு வாழ்க்கையை எல்லாவல்ல இறைவன் முருகப்பெருமான் அமைத்துக் கொடுப்பார்.

குறிப்பு :

???? வருடத்திற்கு ஒருமுறை திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய கடவுளை வணங்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை இரத்த தானம் வழங்குவதும் நன்மையை உண்டாக்கும்.


Share this valuable content with your friends