No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை... சிங்கத்திற்கு உயிர் கொடுத்த மூவர்... மூவரின் இறப்பிற்கான காரணம் யார்?

Feb 21, 2023   Ramya   186    விக்ரமாதித்தன் கதைகள் 


வேதாளத்தை தன் முதுகில் சுமந்துகொண்ட விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது.


👻 ஒரு ஊரில் ஒரு வயதான பண்டிதர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். சில காலம் கழித்து நோய்வாய்ப்பட்டு, மரணப்படுக்கையில் படுத்த அந்த பண்டிதர், தன் மூன்று மகன்களையும் அழைத்து, தங்கள் குடும்பத்தில் ஏழ்மை நிலை ஏற்பட்டுள்ளதால், அம்மூவரும் வேறு ஏதாவது ஊருக்கு சென்று பொருளீட்டி வாழுமாறு கூறி இறந்து விட்டார்.

👻 இச்சம்பவத்திற்கு பின் சில நாட்கள் கழித்து ஒன்று கூடி பேசிய அந்த மூன்று மகன்களும், நாம் மூவரும் ஆளுக்கொரு திசையில் சென்று, ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டு, சரியாக ஒரு வருடம் கழித்து இதே இடத்தில் கூட வேண்டும் என்றும், அப்போது மூவரும் தாங்கள் கற்றுக்கொண்ட வித்தையை செய்து காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்றனர்.

👻 சரியாக ஒரு வருடம் கழித்து அதே இடத்தில் கூடிய அம்மூவரும், தாங்கள் ஒரு வருடத்தில் கற்றுகொண்டவைகளை பற்றி கூற ஆரம்பித்தனர்.

🙋 அதில் முதலாமவன் பிரிந்து கிடங்கும் எவ்வுயிரின் எலும்புகளையும் மீண்டும் சரியான படி இணைத்து, அதற்கு உருவம் தரும் வித்தை தனக்கு தெரியும் எனக் கூறினான்.

🙋 இரண்டாமவன் முழுமையான எலும்புக்கூடாக இருக்கும் எந்த ஒரு இறந்த உயிருக்கும், தன்னால் தசை, சதை போன்ற உறுப்புகளை உருவாகும் வித்தை தெரியும் எனக் கூறினான்.

🙋 மூன்றாமவன் எந்த ஒரு இறந்த உடலுக்கும் தன்னால் உயிர் கொடுக்க முடியும் எனக் கூறினான்.

👻 தங்களின் இந்த வித்தையை சோதித்து பார்க்க எண்ணிய அம்மூவரும், அதற்கேற்ற ஒரு இறந்த உடலை தேடி, அவ்வூரின் அருகிலிருந்த காட்டிற்குள் சென்றனர். அப்போது ஒரு 🦁சிங்கத்தின் எலும்புகள் இவர்கள் கண்ணில் பட்டது.

👻 அப்போது முதலாமவன் தன் வித்தையை பயன்படுத்தி, 🦁அச்சிங்கத்தின் எலும்புகளை இணைத்து அதற்கு உருவம் கொடுத்தான்.

👻 பின்பு இரண்டாமவன் தன் வித்தையை கொண்டு, அந்த எலும்புக்கூட்டிற்கு தசை, சதையாலான உடலை உண்டாக்கினான்.

👻 இறுதியாக மூன்றாமவன் தன் வித்தையை கொண்டு, 🦁அச்சிங்கத்தின் உடலுக்கு உயிரை கொடுத்தான். அப்போது உயிர்பெற்ற, காட்டு விலங்கிற்கே உரிய மூர்க்கத்தனம் கொண்ட 🦁அச்சிங்கம், அம்மூவரையும் தாக்கிக் கொன்றது.

👻 இங்கு கதையை நிறுத்திய வேதாளம் விக்ரமாதித்தனிடம், விக்ரமாதித்தா சிறந்த வித்தைகளை கற்ற அம்மூவரும் இறந்துபோன 🦁அச்சிங்கத்திற்கு உயிர் கொடுத்தனர். இருந்தும் ஐந்தறிவு கொண்ட அந்த விலங்கு, தனக்கே உரிய காட்டு விலங்கின் சுபாவத்தால் அம்மூவரையும் கொன்றுவிட்டது. இவ்விஷயத்தில் அந்த மூவரின் இறப்பிற்கான காரணம் யார்? எனக் கேட்டது.

👻 சற்று நேரம் யோசித்த விக்ரமாதித்தன் அந்த மூன்றாவது மகன் தான் காரணம். ஏனெனில் முதலாமவன் மற்றும் இரண்டாமவன் 🦁அச்சிங்கத்திற்கு உடலமைப்பை மட்டுமே உண்டாக்கினர். உயிரில்லாத பட்சத்தில் அது வெறும் இறந்த உடலாக மட்டுமே இருந்திருக்கும்.

👻 ஆனால் மூன்றாமவன் 🦁அச்சிங்கத்தின் உடலுக்கு உயிர் கொடுத்த காரணமே, 🦁அச்சிங்கம் உயிர்பெற்று அவர்களை கொன்றது. ஆகவே இத்துயர சம்பவத்திற்கு அந்த மூன்றாவது மகனே காரணம் என்று பதிலளித்தான் விக்ரமாதித்தன்.

👻 விக்ரமாதித்தனின் இப்பதிலை கேட்ட வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.


Share this valuable content with your friends


Tags

இடது காலில் பல்லி விழுந்தால் என்ன பலன்? நான் மீனம் ராசி oli ரஜ்ஜூப்பொருத்தம் இல்லாமல் திருமணம் பண்ணலாமா? இறந்தவர் அடைப்பில் இறந்தாரா என்பதை கண்டறிய என்ன செய்வது? அடைப்பில் இறந்தார் என்றால் என்ன? கார்த்திகை மாதத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு? Saturday Horoscope - 21.07.2018 காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவபுரானம் துளசி வாங்குவது போல் கனவு மாசி மாத மகத்துவங்கள் !! ஞாயிற்றுக்கிழமை வீடு பால் காய்ச்சலாமா? முன்னோர் வழிபாடு சுக்கிரன் இருந்தால்என்ன பலன்? முதலமைச்சரின் அறிமுகம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? milk ராகு திசையில் சந்திர புத்தி கேதுபகவானின் குணங்கள் !! rasikal பௌர்ணமியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?