No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மஹாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

Feb 16, 2023   Rathika   166    ஆன்மிகம் 


மஹாசிவராத்திரி...!!


🌷 வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மஹாசிவராத்திரி எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

🌷 மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மஹாசிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். இந்நாளின் மூன்றாம் ஜாமக் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம்.

🌷 சிவனுக்குரிய நாளான மஹாசிவராத்திரி இந்த வருடம் பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம், கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம். அத்தகைய மகத்துவமிக்க நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை :

🌷 மஹாசிவராத்திரி அன்று சிவபெருமானை நினைத்து, சுக போகங்களை தவிர்த்து ஒருவேளை மட்டும் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

🌷 அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, நீராடி விட்டு காலை வேளையில் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்துவிட்டு, சிவாலயங்கள் சென்று வழிபட வேண்டும்.

🌷 வீட்டில் சிவ பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து, தேவையான பொருட்கள், மாலை, தோரணங்கள் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். நண்பகலில் நீராடி விட்டு, உச்சிகால பூஜைகளை செய்ய வேண்டும்.

🌷 சிவாலயங்களில் நடைபெறும் பூஜைக்கு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்ய வேண்டும்.

🌷 மாலை நேரத்தில் மீண்டும் நீராடி விட்டு அலங்கரித்து வைத்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

🌷 நான்கு கால சிவ பூஜையில் பூஜைக்கு தேவையான வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

🌷 சிவ பூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.

🌷 சிவராத்திரியன்று வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலியவற்றை படிக்கலாம். இல்லையேல் அடுத்தவரை படிக்க சொல்லி கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.

செய்யக்கூடாதவை :

🌷 சிவராத்திரி அன்று பகலில் தூங்கக்கூடாது. சிவராத்திரி அன்று கண்விழிக்க வேண்டும் என்பதற்காக கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

🌷 சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும், மனதாலும் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும்.


Share this valuable content with your friends