No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை... யார் மிகவும் மென்மையான பெண்?

Feb 13, 2023   Rathika   200    விக்ரமாதித்தன் கதைகள் 


வேதாளத்தை தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை.

ஒரு சமயம் 'இந்திரபுரம்' என்ற நாட்டை 'மஹிபாலன்' என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்.


அந்த மூன்று பேரும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதத்தில் இளகியவர்களாகவும், மென்மையானவர்களாகவும், உணர்வுபூர்வமானவர்களாகவும் இருந்தனர்.

ஒரு முறை அந்த மூன்று மனைவிகளில் முதலாவது மனைவி, அரண்மனை நந்தவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவள் கை மீது ஒரு மலர் விழுந்து, அதனால் அவளுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதற்கு அடுத்த நாள் மன்னன் மஹிபாலனும், அவனது இரண்டாவது மனைவியும், இரவு நேரத்தில் அரண்மனையின் உப்பரிகையில் நிலா வெளிச்சத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அந்த நிலவொளி அவள் மீது பட்டு, அவளது தோலில் காயங்கள் உண்டானது.

மற்றொரு நாள் அம்மன்னனின் மூன்றாவது மனைவி, தன் அரண்மனையில் யாரோ ஒருவர் அழும் சத்தத்தை கேட்டதற்கே மயங்கி விழுந்து விட்டாள்.

கதையின் கருத்து:

விக்ரமாதித்தா இந்த மூவரில் மிகவும் இளகியவராகவும், மிகவும் மென்மையானவராகவும், மிகவும் உணர்வுபூர்வமானவராகவும் உள்ள பெண் யார்? என்று வேதாளம் கேட்டது.

'நிச்சயம் அந்த மூன்றாவது மனைவிதான். ஏனெனில் யாரோ ஒருவர் அழுவதை கேட்டதற்கே அவள் மயங்கி விட்டாள். பிறரின் துன்பத்தை, தன் துன்பமாக ஏற்கும் மனிதர்களே உண்மையில் உணர்வுபூர்வமானவர்கள். எனவே அந்த மூன்றாவது மனைவி தான் மற்ற இருவரை விட மிக மென்மையானவளும், மிக இளகியவளும், மிக உணர்வுபூர்வமானவளும் ஆவாள்' என விக்ரமாதித்தன் விடையளித்தான்.


இத்தகைய பதிலைக் கேட்டவுடன் வேதாளம், விக்ரமாதித்தனிடமிருந்து தப்பி, மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது. அதை மீண்டும் பிடிக்க விக்ரமாதித்தன் சென்றான்.


Share this valuable content with your friends


Tags

கடிப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? PDF_18.10.2018 பேய் பிடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? குடும்பத்தில் உள்ள மூன்றுபேருக்கும் ஒரே ராசி இருக்கலாமா? யானை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கனவு பஞ்சமி அன்று தொழில் தொடங்கலாமா? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்துணர்ச்சியான நாள் துர்க்கை வீடு குடிப்போக உகந்த நாட்கள் கோவிலில் நான் காப்பு கட்டுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? சாதனைகள் புரிவதில் வல்லவர்கள்... யாராக இருப்பார்கள்? விருத்திராசுரன் இந்திரனை கொல்லப் புறப்படுதல் கேது சந்திரன் இருந்தால் என்ன பலன் Horoscope in pdf format காதலனை கனவில் கண்டால் என்ன பலன்? 28.11.2020 Rasipalan in PDF Format!! HOUSE பிள்ளையாருக்கு பூஜை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11.09.2018 ராசிபலன்கள் PDF வடிவில்