🌟 நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக கருதப்படுவது சனி கிரகம் ஆகும். சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது. அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார்.
🌟 அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.
🌟 சனிபகவான் ஒருவரின் ஜென்ம ராசிக்கு 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலக்கட்டத்தில் இன்னல்கள் இல்லாத இன்பங்களை அளிப்பார்.
🌟 ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரைய சனி, ஜென்ம சனி, பாதச்சனி என்ற நிலைகளில் இருந்து அந்தந்த ராசிகளுக்கு புதுவிதமான அனுபவத்தையும், படிப்பினையும் அளிப்பார்.
🌟 அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி காலத்தில் பலவிதமான இன்னல்களை உருவாக்கினாலும் கடைசியில் நன்மையான பலன்களை கொடுப்பார். மனதில் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மற்றும் புதுவிதமான புரிதல்களையும் உருவாக்குவார்.
சனிப்பெயர்ச்சி எப்போது நிகழ்கிறது?
💢 2023ஆம் ஆண்டு தை மாதம் 3ஆம் நாளான ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும்,
💢 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
ஏழரை சனி எந்தெந்த ராசிக்கு?
💥 ஒருவரின் ஜாதக கட்டத்தில் ஜெனன சந்திரன் இருக்கும் ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் கடந்து செல்லும் காலமானது ஏழரை சனி என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியின் தாக்கத்திற்கு உட்படும் ராசிகள் பின்வருமாறு..
💥 மகர ராசிக்கு ஜென்ம சனி முடிந்து பாதச்சனி ஆரம்பிக்கிறது.
💥 கும்ப ராசிக்கு விரைய சனி முடிந்து ஜென்ம சனி ஆரம்பிக்கிறது.
💥 மீன ராசிக்கு லாப சனி முடிந்து விரைய சனி ஆரம்பிக்கிறது.
அஷ்டம சனி எந்தெந்த ராசிக்கு?
🌞 இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியால் அஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து மிதுன ராசி விடுபட்டு, கடக ராசி சனியின் தாக்கத்திற்கு உட்பட போகின்றது.
🌞 அஷ்டம சனியின் பொதுவான பலன்கள் என்பது நெருக்கமானவர்களை பற்றிய புதிய புரிதலை உருவாக்கும். எதிர்பாராத சில இழப்புகள் மூலம் புதிய அத்தியாயம் பிறக்கும். சிந்தனைகளில் எதிர்காலம் சார்ந்த கனவுகளும், செயல்பாடுகள் பற்றிய சிந்தனைகளும் அதிகரிக்கும்.
கண்டச்சனி எந்தெந்த ராசிக்கு?
🎨 இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியால் கண்டச்சனியின் தாக்கத்தில் இருந்து கடக ராசி விடுபட்டு, சிம்ம ராசி சனியின் தாக்கதிற்கு உட்பட போகின்றது.
7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? சனி மற்றும் ராகு இணைந்திருந்தால் என்ன பலன்? உலக உணவு தினம் jothider pathilgall பாலகுமாரன் நீர் நிறைந்த தூய்மையான கிணற்றை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விசையை சனிப்பெயர்ச்சிபலன்கள்PDF moneyplant simmasm அகல் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் coconut jothdier kelvi pathilgal சனிமகா திசையில் நன்மைகள் பெற என்ன செய்ய வேண்டும்? மார்கழியில் திருவாதிரை... ஏன் இவ்வளவு ஸ்பெஷல்? குடமுழுக்கு கும்பாபிஷேகத்தை பார்க்கலாமா? வெட்டிய ஆட்டுத்தலையை கனவில் கண்டால் என்ன பலன்? paathagathipathi உலக தொலைகாட்சி தினம் rasipalan - 23.08.2018