No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபெருமானுடைய பத்தினி மகேஸ்வரி!!

Oct 11, 2018   Ananthi   549    ஆன்மிகம் 

🌟 அம்மன் வடிவம் : மகேஸ்வரி

🌟 பூஜையின் நோக்கம் : மது கைடவர் என்ற அசுரனை வதம் புரிதல்

🌟 மகேஸ்வரியின் வடிவம் : திரிசூலமும், பிறை சந்திரன் மற்றும் அரவமும் தரித்து ரிஷ ப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள் மகேஸ்வரி.

🌟 சிவபெருமானுடைய பத்தினி மகேஸ்வரி.

மூவகை குணங்கள் :

1. சாத்வீக குணம் : சாத்வீக குணம் உடையவர்கள் தவம், கல்வி, தியானம், இரக்கம், மகிழ்ச்சி, பெருமை, அடக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

2. தாமசக் குணம் : தாமசக் குணம் உடையவர்கள் சோம்பல், அறியாமை, அதர்மம், மந்தபுத்தி, தூக்கம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

3. இராட்சத குணம் : இராட்சத குணம் உடையவர்கள் கோபம், அகங்காரம், மூர்க்கத்தனம் ஆகியன நிறைந்திருப்பார்கள்.

🌟 அளவிடமுடியாத பெரும் சரீரம் கொண்டவள். மகேஸ்வரியை மஹீதி என்றும் அழைப்பார்கள்.

🌟 மகேஸ்வரி சகல சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடியவர்.

🌟 தென்நாட்டில் முதல் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் வனதுர்க்கை ஆகும்.

🌟 வனதுர்க்கை என்றால் வனத்தில் குடிகொண்டவள் என்பது பொருளல்ல. இந்த பிரபஞ்சத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் வாழ்க்கை என்னும் வனத்தில் அகப்பட்டு வெளிவரமுடியாமல் தவிக்கின்றவர் ஆவார்.

🌟 எனவே, தேவியின் திருவுருவமான வனதுர்க்கையை நினைத்து வழிபடுவதால் வனத்தில் உள்ள அடர்ந்த இருளைப் போக்கி நம்மை செழுமைப்படுத்துகிறார்.

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : மல்லிகைப்பூ மாலை

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : வில்வம்

🌟 அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : சிவப்பு

🌟 அன்னையின் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : சிவப்புநிற பூக்கள்

🌟 கோலம் : அரிசி மாவால் புள்ளி கோலம் போட வேண்டும்.

🌟 நெய்வேத்தியம் : வெண்பொங்கல்

🌟 குமாரி பூஜையில் உள்ள குளத்தின் வயது : 2 வயது

🌟 குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : இன்னல்கள் நீங்கும்.

🌟 பாட வேண்டிய ராகம் : தோடி

🌟 பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : மிருதங்கம்

🌟 குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சுண்டல்

🌟 பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.


Share this valuable content with your friends