No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விலைக்கு வாங்கிய வீட்டில் வாஸ்து மாற்றங்களை செய்யலாமா? அப்படி செய்தால் ஏதேனும் தோஷம் ஏற்படுமா?

Sep 28, 2018   Ananthi   463    வாஸ்து 

கேள்வி :

விலைக்கு வாங்கிய வீட்டில் வாஸ்து மாற்றங்களை செய்யலாமா? அப்படி செய்தால் ஏதேனும் தோஷம் ஏற்படுமா?

பதில் :

1. ஒரு பழைய கட்டிடம் விற்பனைக்கு வருகிறது என்றால், என்ன காரணத்திற்காக விற்பனை செய்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. ஒரு கட்டிடம் கடனுக்காக விற்பனை செய்யப்பட்டால் அந்த கட்டிடம் மீண்டும் அதை வாங்குபவருக்கும் அதே சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

3. எந்தப் பகுதியில் முதலில் வேலையை தொடங்க வேண்டும் என்று அதைப் பற்றிய முழு விவரங்களையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

காரணங்கள் :

🏠 வடகிழக்கில் ஒரு வீட்டை சரி செய்யும்போது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும், அந்த வேலையை செய்யக்கூடிய கூலி ஆட்களுக்கும் தலைப்பகுதியில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

🏠 தென்மேற்கில் ஒரு வீட்டை சரி செய்யும்போது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும், கூலி ஆட்களுக்கும் வலது கை, வலது கால், இடுப்பு போன்ற பகுதிகளில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

🏠 வடமேற்கு பகுதியை சரி செய்யும்போது அந்த வேலை முற்றுப்பெறாமல் பாதியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

🏠 ஒரு வீட்டின் தென்கிழக்கு பகுதியை சரி செய்யும்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்சனைகள், வம்பு வழக்குகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

🏠 ஒரு பழைய கட்டிடத்தை மாற்றி அமைக்கும்போது அனுபவப்பட்ட வாஸ்து நிபுணரை அழைத்து எதை முதலில் செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது? போன்ற விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வேலையை துவங்குவது சிறப்பு.

தோஷங்களும், பரிகாரங்களும் :

🏠 புதுக்கட்டிடங்கள் ஆனாலும், பழைய கட்டிடங்கள் ஆனாலும் யாருக்கு என்ன தட்சணை கொடுக்க வேண்டுமோ அந்த தட்சணையை முறையாக கொடுத்தலே அங்குள்ள தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் பரிகாரம் என்பதே கிடையாது. தவறு என்றால் மாற்றி அமைக்க முற்படுங்கள்.


Share this valuable content with your friends