No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மஹா சனிப்பிரதோஷ பலன்கள்!!

Sep 22, 2018   Ananthi   775    ஆன்மிகம் 

🌟 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் மஹா சனிப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.

🌟 சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனிப்பிரதோஷம்.

🌟 சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வருவது சனிப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

வழிபாடு :

🌟 பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.

🌟 பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

பலன்கள் :

🌟 சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும்.

🌟 மேலும், பிரதோஷத்தன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

🌟 பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

சனிமஹா பிரதோஷம் :

🌟 நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பை தரும்.

🌟 மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

🌟 சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்திற்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப்பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்திற்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.


Share this valuable content with your friends


Tags

இன்றைய வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..! ஜூன் 30 திடீர் அதிர்ஷ்டம்... சமுதாயத்தில் பெயர் சிவபெருமான் திடீரென மறைந்து கைலாய மலைக்குச் செல்லுதல் கர்ம வினைகள் daily horoscope 05.11.2018 பைக் மறைவு ஸ்தானம் என்றால் என்ன? ரிஷப ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! பாம்பு என் மீது ஏறி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? panjakavyam தீபாவளியை எப்போது கொண்டாட வேண்டும்? பேசும் கிளி 7ல் புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? daily horoscope 02.09.2020 in pdf format சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (14.04.2020) காம்பவுண்ட் ஆடை தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 23.11.2019 Rasipalan in pdf format!! பஞ்சமி திதியில் தொழில் தொடங்கலாமா?