No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 21, 2018   Ananthi   550    நவ கிரகங்கள் 

🌹 கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதனுடன் சனிபகவான் நட்பு என்ற நிலையில் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம் :

🌹 சுயநலமும், பொதுநலமும் கலந்த குணம் கொண்டவர்கள்.

🌹 பல திறமைகள் இருந்தாலும் எதுவும் தெரியாதது போல் இருக்கக்கூடியவர்கள்.

🌹 பல துறைகள் பற்றிய அறிவு உடையவர்கள்.

🌹 புகழுக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌹 எதிர்ப்புகளை மறைமுகமான முறையில் கையாண்டு சமாளிக்கும் திறமை உடையவர்கள்.

🌹 எதையும் மறக்காதவர்கள். அது உதவியானாலும், பகையானாலும் சரி.

🌹 தனது வலி மற்றும் மன வேதனைகளை வெளிப்படுத்தாதவர்கள்.

🌹 நித்திரையில் வல்லவர்கள்.

🌹 அறுசுவை உணவை ரசித்து ருசித்து உண்ணக்கூடியவர்கள். அதனாலேயே சில நேரங்களில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இவர்களுக்கு ஏற்படும்.

🌹 மறைமுகமான எதிர்ப்புகளையும், எதிரிகளையும் உடையவர்கள்.

🌹 தனக்கு காரியம் முடிய வேண்டுமாயின் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌹 அவ்வளவு எளிதில் எங்கும் எதிலும் உடனடியான முடிவுகளையோ அல்லது முதலீடுகளையோ செய்ய மாட்டார்கள். எச்சரிக்கை குணம் மிகுந்தவர்கள்.



Share this valuable content with your friends