No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பண வரவை தடைசெய்யும் வீட்டின் அமைப்புகள் !!

Sep 12, 2018   Ananthi   651    வாஸ்து 

பணம் என்பது மனித வாழ்வில் மிக மிக முக்கியமான பங்கினை கொண்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக பணம் சம்பாதிப்பதிலேயே மனிதன் தன் வாழ்நாளில் 50 சதவீத பங்கினை செலவிடுகிறான். அப்படி நேரம் செலவிடும் போதும்கூட சில பேருக்கு பணம் என்பது எளிதாக கிடைத்துவிடுவதில்லை.

பலபேர் பல காரணங்கள் கூறி இருந்தாலும் என்னுடைய அனுபவத்தில் ஒருவர் வீட்டின் அமைப்பு தவறாக இருக்கும்போது மலை அளவு கஷ;டப்பட்டாலும் எளிதில் அவர்களுக்கு பணம் என்பது கிடைப்பது இல்லை.


பண வரவை தடைசெய்யும் வீட்டின் அமைப்புகள் :

1. வடக்கு முழுவதும் மூடிய வீட்டின் அமைப்பு.

2. நான்கு புறமும் காம்பவுண்ட் இல்லாத அமைப்புகள்.

3. வடகிழக்கில் வடக்கு பக்கம் ஜன்னல் இல்லாத அமைப்பு.

4. வடகிழக்கில் கிழக்கு பக்கம் ஜன்னல் இல்லாத அமைப்புகள்.

5. வடகிழக்கில் மிகப்பெரிய அளவில் போர்டிக்கோ அமைப்புகள் இருப்பது.

6. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜன்னல்களை திறந்தாலும் வானம் தெரியாத அளவில் பெரிய அளவில் போர்டிக்கோ அல்லது தாழ்வாரங்கள் அமைத்திருப்பது.

7. வடகிழக்கிலுள்ள ஜன்னல்களை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது.

8. வடகிழக்கில் பூஜையறை வைத்து அந்த இடத்தை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது.

9. வடகிழக்கில் கழிவறை வைத்திருப்பது.

10. வடகிழக்கில் சமையலறை வைத்திருப்பது.

11. வடகிழக்கில் மாடிப்படி அமைப்பது.

12. வடகிழக்கில் சூரிய ஒளி உள்ளே வர முடியாத அளவிற்கு மிக அருகாமையில் கட்டமைப்புகள் மிக உயரமாக இருப்பது.

13. வடகிழக்கில் மரம், செடி, கொடிகளை வளரவிட்டு, வடகிழக்கு பகுதியை மூடி சூரிய ஒளி உள்ளே வரமுடியாத நிலையில் இருப்பது.

14. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் காம்பவுண்ட்-க்கும், வீட்டிற்கும் உள்ள இடைவெளி 6 அடிக்கும் குறைவாக இருப்பது.

15. திசைகாட்டிக்கு வடக்கு என்பது 45 டிகிரி கோணத்தில் விலகி இருப்பது.

16. வடகிழக்கில் சிட் அவுட் கட்டமைப்புக்காக, வடக்கு அல்லது கிழக்கில் ஜன்னல் இல்லாமல் வீட்டை உருவாக்குவது.

17. வடக்கிலும், கிழக்கிலும் சூரியன், சுக்கிரன், புதன் கிரகத்தை மையமாக கொண்டு முக்கிய வாசல், முக்கிய ஜன்னல் நீச்ச பகுதியில் வைத்துக் கொள்வது.

18. வடகிழக்கில் high ceiling அல்லது low ceiling அமைத்துக்கொள்வது.

19. வடகிழக்கில் முக்கிய வாசலில் நிலை கதவில் வரக்கூடிய நிரந்தர கண்ணாடியை ஜன்னலாக பாவித்து கொள்வது.

20. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருக்கும் ஜன்னல்களில் மொத்தமான ஸ்க்ரீன் துணியை கொண்டு நிரந்தரமாக மூடி இருப்பது.

21. வடகிழக்கை sitout அல்லது L போன்ற வடிவத்தில் அமைத்துக் கொள்வது.

மேற்கூறிய அமைப்புகள் உள்ள வீடுகளில் பணப் பிரச்சனை இருக்குமானால், அந்த வீட்டின் அமைப்பு தான் காரணம் என்று உறுதியாக கூறமுடியும்.



Share this valuable content with your friends