No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளெருக்கு விநாயகர் !!

Sep 08, 2018   Ananthi   531    ஆன்மிகம் 

🌟 வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளையார் எத்தனை விதமாக இருந்தாலும் வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகருக்கே சக்தி அதிகம்.

🌟 புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.

🌟 ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளெருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக்கூடாது.

🌟 வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகரின் மகிமையை உணரலாம்.

🌟 வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் ஏற்றினால் சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வட வேரில் மணிமாலை செய்யலாம்.

🌟 சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும்.


Share this valuable content with your friends