No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டின் எந்த பகுதியில் தவறுகள் இருந்தால் என்னென்ன செலவுகள் ஏற்படும்?

Sep 05, 2018   Ananthi   4954    வாஸ்து 

🏠 மனிதனின் அடிப்படை தேவைகளில் மிக முக்கிய பங்கினை வகிப்பது பணம். பணம் சம்பாதிக்க ஓரிரு வழிகள் இருந்தாலும் அந்த பணத்தை செலவிட பல வழிகள் ஏற்படுகிறது.

🏠 இதில் ஒரு சிலருக்கு தன்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மருத்துவத்திற்கும், இன்னும் சிலர் வட்டி, கடன், மாத தவணை கட்டுவதற்கும், இன்னும் சிலபேர் காரணங்கள் இன்றி செலவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. என்னுடைய அனுபவத்தில் ஒருவரின் வீட்டின் அமைப்பை பொருத்தே தன்னுடைய பணத்தை ஒருவர் எவ்வாறெல்லாம் செலவிடுவார் என்று தீர்க்கமாக கூறமுடியும்.

1. ஒருவரின் வீட்டின் அமைப்பில் தென்கிழக்கு பகுதியில் தவறான அமைப்புகள் வருமானால் ஏற்படக்கூடிய செலவுகள் :

🏠 ஒருவரின் வீட்டின் அமைப்பில் தென்கிழக்கு பகுதியில் தவறு இருக்கும்போது அவரின் செலவுகள் நோய்க்காகவும், மருத்துவத்திற்காகவும், ஆன்மிகத்திற்காகவும், போலீஸ் கேஸ், கோர்ட் கேஸ்க்காகவும், கல்விக்காகவும் அதிகப்படியாக செலவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

2. ஒருவரின் வீட்டின் அமைப்பில் வடகிழக்கு பகுதியில் தவறான அமைப்புகள் வருமானால் ஏற்படக்கூடிய செலவுகள் :

🏠 திடீர் செலவுகள், காரணமில்லாத செலவுகள், ஒரு வேலையை எளிதாக முடிக்காமல் பலமுறை போராடி முடிக்கும்போது ஏற்படும் வீண் செலவுகள், கண்ணுக்குத்தெரியாத மறைமுக செலவுகள் (அபராதம் கட்டுதல்) போன்றவைகள். தவறான இடத்தில் முதலீடு போடுதல் போன்றவைகள், திடீர் மார்க்கெட் சரிவு ஏற்பட்டு பணம் இழப்பு ஏற்படுவது போன்றவைகள் ஏற்படக்கூடும்.

3. ஒருவரின் வீட்டின் அமைப்பில் தென்மேற்கு பகுதியில் தவறான அமைப்புகள் வரும்போது ஏற்படும் செலவுகள் :

🏠 அதிகபடியான கடனுக்கு வட்டிகட்டுதல், மாதத்தவணைகள், கிரெடிட் கார்டு தவணைகள், தவணைக்கு தவறிய வட்டிகட்டுதல் (பெனால்ட்டி), கொடுத்த கடன் வசூலிக்க முடியாத நிலை, திடீர் விபத்து ஏற்படுதல் போன்றவைகள் மூலம் அதிக பணச் செலவுகள் ஏற்படக்கூடும்.

4. ஒருவரின் வீட்டின் அமைப்பில் வடமேற்கு பகுதியில் தவறான அமைப்புகள் வரும்போது ஏற்படும் செலவுகள் :

🏠 அதிகப்படியாக வாகனங்களுக்கு செலவிடுதல், அதிகப்படியான பிரயாணங்களுக்காக செலவிடுதல், ஆடம்பர வாழ்க்கைக்காக செலவிடுதல், லாபமே கொடுக்காத பல தொழில்களில் முதலீடு செய்வது, மனநலம், உடல்நலம், பொருளாதாரம், ஆன்மிகம், மூடநம்பிக்கை இவைகளை கற்றுக்கொள்வதற்காகவும், அனுபவிப்பதற்கும் அதிக செலவுகள் செய்ய நேரிடும்.


🏠 ஒருவரின் வீட்டின் அமைப்பே அவரை தவறான பாதைக்கு இழுத்து சென்று அவரின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட வைத்து அவரை பல வழிகளில் செலவுகள் செய்ய வைக்கிறது என்பதை உறுதிபட கூற முடியும்.


Share this valuable content with your friends