No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமண பட்டு புரட்டாசி மாதம் வாங்கலாமா?

Nov 23, 2020   Ananthi   292    ஜோதிடர் பதில்கள் 

1. கடக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்வது கடினம்.

🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. என்னுடைய அண்ணன் இறந்து விட்டார். நான் புதுமனை புகுவிழா நடத்தலாமா?

🌟 உங்களுடைய அண்ணன் இறந்து மூன்று மாதத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் புதுமனை புகுவிழா நடத்தி கொள்ளலாம்.

3. திருமண பட்டு புரட்டாசி மாதம் வாங்கலாமா?

🌟 திருமண பட்டு புரட்டாசி மாதம் வாங்கலாம்.

4. சனிக்கிழமையில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கலாமா?

🌟 சனிக்கிழமையில் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதைக் காட்டிலும், மற்ற தினங்களில் அடிக்கலாம்.

5. வீட்டின் தலைவாசலில் கண் திருஷ்டிக்காக வைத்திருப்பதை (கரித்துண்டு, எலுமிச்சைப்பழம், வரமிளகாய்) அமாவாசை அன்று மாற்றலாமா?

🌟 வீட்டின் தலைவாசலில் கண் திருஷ்டிக்காக வைத்திருப்பதை (கரித்துண்டு, எலுமிச்சைப்பழம், வரமிளகாய்) அமாவாசை அன்று மாற்றலாம்.

6. செவ்வாய் திசையில், சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

🌟 செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.

🌟 மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends