No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கர்ப்பமாக இருக்கும் பொழுது தாயார் வீட்டிற்கு எந்த மாதம் போக வேண்டும்?

Nov 11, 2020   Ananthi   320    ஜோதிடர் பதில்கள் 

1. மாரியம்மன் கோவிலில் பூச்சாற்றி இருக்கும்பொழுது வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா?

🌟 கோவிலில் திருவிழா முடிந்த பின்பு வாடகை வீட்டில் பால் காய்ச்சிக் கொள்ளவும்.

2. வீட்டில் இருக்கும் வாழைமரத்தில் வடக்கு திசை நோக்கி வாழைக்குலை வந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 வீட்டில் இருக்கும் வாழைமரத்தில் வடக்கு திசை நோக்கி வாழைக்குலை வந்தால் நல்லதாகும்.

3. கர்ப்பமாக இருக்கும் பொழுது தாயார் வீட்டிற்கு எந்த மாதம் போக வேண்டும்?

🌟 கர்ப்பமாக இருக்கும் பொழுது தாயார் வீட்டிற்கு ஒற்றைப்படை மாதங்களில் செல்லலாம்.

4. மூலம் நட்சத்திரத்தில் இருக்கும் ஆண்மகனிற்கு, பெற்றோர்கள் மற்றும் சகோதரன் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொடுக்கலாமா?

🌟 மூலம் நட்சத்திரத்தில் இருக்கும் ஆண்மகனிற்கு, பெற்றோர்கள் மற்றும் சகோதரன் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொடுக்கலாம்.

5. பிறந்த கிழமையில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

🌟 பிறந்த கிழமையில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எண்ணெய் தேய்த்து குளித்து கொள்வதை தவிர்க்கவும். விசேஷ தினமாக இருந்தால் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளித்துக் கொள்ளவும்.

6. அமாவாசை அன்று புதிய வாகனம் வாங்கலாமா?

🌟 அமாவாசை அன்று புதிய வாகனம் வாங்குவதை தவிர்த்து மற்ற சுப திதியில் வாங்கிக் கொள்ளவும்.




Share this valuable content with your friends