No Image
 Sun, Oct 06, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கண்பார்வை குறைக்கு வாஸ்து சாஸ்திரம் ஒரு காரணமா?

Jun 22, 2018   Dharani   372    வாஸ்து 

👑 நமது உடலில் மிகமிக முக்கியமான பங்கினை வகிப்பது நமது கண்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களுக்கு கண்பார்வை கிடைக்காமல் போவதற்கு வாஸ்து சாஸ்திரம் ஒரு காரணமா?

👑 நமது உடல் அமைப்பும், நமது வீட்டு அமைப்பும் ஒன்றே. நாம் குடியிருக்கும் நம் வீட்டில் இயற்கைக்கு மாறாக என்னென்ன தவறுகள் செய்கிறமோ அதற்கான பலனோ பலாபலனோ உடனே நமக்கு நமது உடலில் எதிரொளிக்கிறது.

👑 அந்த வகையில் ஒருவர் கண்பார்வை இல்லாமல் பிறக்கிறார் என்றால் அந்த வீட்டின் மிகமிக மோசமான தவறான அமைப்புள்ள வீட்டில் அவருடைய பெற்றோர் வசித்திருப்பார்கள். அதன் தாக்கமே அதற்கான காரணம்.

👑 இன்றைய உலகத்தில் ஒருவருக்கு திடீர் என்று கண்பார்வை பாதிக்கப்பட்டது என்றும், சிலபேருக்கு நிரந்தரமாகவே கண்பார்வையே போய்விட்டது என்றெல்லாம் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறோம். சில பேரு சர்க்கரை வியாதியால் கண்பார்வை பாதிக்க வாய்ப்புண்டு.

👑 இதற்கெல்லாம் நாம் குடியிருக்கும் வீட்டில் கிழக்கு பகுதியே மிகமிக முக்கிய காரணமாக அமைகிறது.

👑 நாம் குடியிருக்கும் வீட்டில் கிழக்கு பகுதி முழுவதும் அடைபட்டால் அந்த வீட்டில் இருப்பவர்கள் கண்பார்வையில் பல பல கோளாறுகள் வர வாய்ப்புண்டு. காரணம் சூரிய ஒளி கதிரிலிருந்து வர கூடிய விட்டமின்கள் நமக்கு கிடைக்காமல் போவதே மூலக்காரணம்.

1. நமது வீடு கிழக்கு முழுவதும் அடைப்பட்ட வீட்டு அமைப்பு தவறு.

2. நமது வீட்டிற்கு கிழக்கு பகுதி முழுவதும் உயரமான கட்டிட அமைப்பு வருவதும் தவறு.

3. நமது வீட்டிற்கு கிழக்கு பகுதியில் உயரமான மலை போன்ற அமைப்புகள் வருவதும் தவறு.

👑 இதுபோல் இன்றும் சில தவறான அமைப்புகள் உண்டு. அனுபவ அறிவு உள்ள வாஸ்து நிபுணரின் உதவியால் உங்களுடைய இடத்தை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

Tagged  Vasthu

Share this valuable content with your friends