No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இந்த நோய் வருவதற்கு இவர்தான் முக்கிய காரணம் !!

Aug 31, 2018   Ananthi   538    ஆன்மிகம் 

👉 ஒருவருக்கு ஏற்படும் நோய்கள், ஏமாற்றம் மற்றும் கண்டங்கள் பற்றி அவரவர் ஜாதகத்தில் உள்ள மறைவு ஸ்தானங்களான 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

👉 நவகிரகங்கள் மனிதர்களை மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தில் பிறக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் காரணகர்த்தாவாக விளங்குகின்றார்கள். இந்த பிரபஞ்சத்தில் மற்ற உயிரினங்களை காட்டிலும் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவு ஓங்கி இருப்பதால் இவை அனைத்தையும் இறைவனின் கிருபையால் நாம் வகுத்து உணர்ந்து கொள்கின்றோம்.

👉 இந்த ஆறாம் அறிவால் தான் மற்ற உயிரினங்கள் மாதிரி பிறந்தோம், மடிந்தோம் என்று அல்லாமல் புதுவிதமான கண்ணோட்டம் மற்றும் அணுகுமுறையால் பலவித மாற்றங்களை கொண்டு வருகிறோம். சில நேரங்களில் இதுவே அவர்களது முடிவுக்கும் அழைத்துச் செல்லும் என்பதையும் நாம் அறிவோம்.

👉 மானிடனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் நம்மை கட்டுப்படுத்துபவர்களான நவகிரகங்கள் அவர்களின் கட்டுபாட்டில் இருக்கும் அங்கங்கள் மற்றும் சூட்சம அங்கங்கள் முதலியவற்றையும் நாம் அறிந்தோம்.

👉 இனி ஒவ்வொரு கிரகத்தை பற்றியும் அதனால் தோற்றுவிக்கப்படும் நோயின் தன்மையை பற்றியும் ஒரு சிறு அளவில் காண்போம்.

சூரியன் :

👉 நவகிரகங்களில் முதன்மையானவர் சூரியன் ஆவார். சூரியன் நெருப்பு கிரகம் என்றும் உஷ;ணக்காரகன் என்றும் அழைக்கப்படுவார். ஆகையால், அவருடைய இயல்புக்கு தொடர்பு கொண்ட உஷ;ணம் சம்மந்தமான நோயைக் கொடுப்பார்.

👉 மேலும் சூரியன் கண், தலை மற்றும் எலும்புகளுக்கு ஆதிபத்தியம் பெறுவதால் தலைவலி, காய்ச்சல், பசியின்மை, கண் சம்பந்தமான நோய், பார்வை குறைபாடு, தோல் மற்றும் எலும்புகளில் வரும் நோய்கள், இருமல், வலிப்பு, தேக எரிச்சல், இருதய ரோகம், அக்னி, ஆயுதம், விஷம் முதலியவற்றால் ஆபத்து ஏற்படும்.

👉 மேலும் வயிற்றுப்போக்கு, வெயில் வெப்பத்தாக்கு நோய், காமாலை, அஜீரணம், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், வயிற்றில் பூச்சிகள், தலையில் வழுக்கை விழுதல், இளம் பருவத்தில் வெள்ளை முடி உருவாதல், உடல் உறவின்போது விரைவாக விந்தணுக்கள் வெளியேறுதல், முக்கியமாக அம்மை நோயை ஏற்படுத்துதல் போன்ற நோய்கள் ஏற்படலாம்.


Share this valuable content with your friends