மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Sep 01, 2020 Ananthi 426 கனவு பலன்கள்
1. புதிய வீட்டில் பால் காய்ச்சுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 புதிய வீட்டில் பால் காய்ச்சுவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை ஏற்படும் என்பதை குறிக்கின்றது.
2. மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மல்லிகை பூ வாங்குவது போல் கனவு கண்டால் திருமண வாய்ப்புகள் கைகூடி வரும் என்பதை குறிக்கின்றது.
3. மரம் நிறைய பழங்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மரம் நிறைய பழங்கள் இருப்பது போல் கனவு கண்டால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும் என்பதை குறிக்கின்றது.
4. பச்சை மரத்தை பிடிங்கி எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களது முயற்சியால் உண்டாகும் பலனை மற்றொருவர் அனுபவிப்பார் என்பதை குறிக்கின்றது.
5. அம்மை நோய் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 அம்மை நோய் வருவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதை குறிக்கின்றது.
6. மாலை அணிந்து மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் என்பதை குறிக்கின்றது.
7. புலி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழிலில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு நீங்கி உதவிகள் கிடைக்கும் என்பதை குறிக்கின்றது.