No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாவிலைகளை வீட்டு வாசலில் எப்போதும் கட்டலாமா?

Aug 26, 2020   Ananthi   281    ஜோதிடர் பதில்கள் 

1. மாவிலைகளை வீட்டு வாசலில் எப்போதும் கட்டலாமா?

🌟 மாவிலைகளை வீட்டு வாசலில் எப்போதும் கட்டலாம்.

2. பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 பிறந்த மாதத்தில் திருமணம் செய்தல் என்பது உத்தமம் அல்ல. மற்ற சுப மாதங்களில் திருமணம் செய்தல் நல்லதாகும்.

3. மரணயோகத்தில் கணபதி ஹோமம் செய்யலாமா?

🌟 மரணயோகத்தில் கணபதி ஹோமம் செய்வதை தவிர்த்து, சுபயோகத்தில் கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.

4. 7ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தனது விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சுதந்திரமாக செயல்பட விரும்புபவர்கள்.

🌟 கவனக்குறைவால் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. புதிய வீட்டிற்கு வாஸ்து பூஜைகள் செய்ய வேண்டுமா?

🌟 புதிய வீட்டிற்கு வாஸ்து பூஜைகள் செய்வது மேன்மை அளிக்கும்.

6. பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

🌟 பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரம் ஆகும்.

🌟 பிரம்ம முகூர்த்தத்திற்கு திதி, நட்சத்திரம் மற்றும் யோக தோஷங்கள் என எதுவும் கிடையாது. இந்த நேரத்தில் சுபச்செயல்கள் அனைத்தும் செய்யலாம்.



Share this valuable content with your friends