1. வீட்டில் ராகு, எமகண்ட நேரத்தில் விளக்கு ஏற்றலாமா?
🌟 வீட்டில் ராகு, எமகண்ட நேரத்தில் விளக்கு ஏற்றலாம்.
🌟 தீபம் ஏற்றும் எல்லா நேரமும் நல்ல நேரமே, இருள் விலகி ஒளி பிறக்கும்.
2. 3ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 வாழ்க்கை துணைவரின் மூலம் நன்மை உண்டாகும்.
🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்கள்.
🌟 பொது பணிகளின் மூலம் மேன்மை உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. அஷ்டமி அன்று திருமணம் வைக்கலாமா?
🌟 அஷ்டமி அன்று திருமணம் வைப்பது நன்றன்று.
4. உத்திர நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 அழகான முக அமைப்பு உடையவர்கள்.
🌟 நீராடுவதில் விருப்பம் உடையவர்கள்.
🌟 வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. சிம்ம ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 எதையும் சிந்தித்து பார்த்து முடிவு எடுக்கும் மனம் கொண்டவர்கள்.
🌟 எதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
🌟 கடன் வாங்குவது இவர்களுக்கு பிடிக்காது.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. ரிஷப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 ஞாபக சக்தி கொண்டவர்கள்.
🌟 எதிலும் விருப்பம் இல்லாதவர்கள்.
🌟 தற்பெருமை மற்றும் புகழ்ச்சியை விரும்பாதவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.