No Image
 Sun, Oct 06, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோயிலுக்குச் சென்று வந்தவுடன் கால் கழுவக்கூடாது என்கிறார்களே ஏன்?

Jun 22, 2018   Vahini   393    ஆன்மிகம் 

கோயில் என்பது கடவுள் இருக்கும் இடம். நமது பக்தியைச் செலுத்தக் கோயிலுக்குச் செல்கிறோம். இந்த உலகத்தில் பரிசுத்தமான ஓர் இடம் என்றால் அன்றும் இன்றும் கோயில்தான்!

அந்த இடத்துக்குப் போய் அவரை தரிசனம் செய்து திரும்பும்போது கால் கழுவக் கூடாது. நாம் முழுக்கவே சுத்தம் ஆன பிறகு, காலை மட்டும் தனியே சுத்தம் செய்வானேன்? எங்கேயெல்லாம் கால் கழுவ வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கேயெல்லாம் அதற்கு ஒரு காரணம் இருக்கும். புது வேஷ்டி கட்டியிருந்தால், வெளியில் நடந்துவிட்டு வந்தால் கால் கழுவ வேண்டும்.

கல்யாணத்தில் பரதேசிக் கோலத்தில் கோயிலுக்குப் போகிறான் மணமகன். பகவானைக் கும்பிடுகிறான். திரும்பி வந்தவுடன் அப்படியே ஊஞ்சலில் உட்காருகிறான். கால் கழுவுவதில்லை. அதன் பிறகு காலில் நலுங்கு அது இது எல்லாம் வைத்த பிறகு, கழுவ வேண்டுமே என்று கழுவுகிறான்.

பகவானின் தரிசனம் முடித்து வரும்போது நம் உடலில் எந்த அசுத்தமும் இருப்பதில்லை என்பதால், எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சுத்தப்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை.

தேர் இழுக்கிறோம். அங்கே ஒரு வித்தியாசமும் இல்லை. அங்கே ஒருவருக்கு ஏதோ தீட்டு இருக்கிறது என்றால் கவலையே இல்லை. தேர் வடத்தைத் தொட்ட உடனேயே எல்லாத் தீட்டும் போய்விடுகிறது. கோயிலில் இருந்து திரும்பும்போது மழை வந்துவிட்டது சேற்றில் கால் வைத்துவிட்டீர்கள் என்றால் அப்போது கால் கழுவலாம்.

Tagged  Anmegam

Share this valuable content with your friends


Tags

ஆத்மா கனவில் வந்தால் என்ன பலன்? புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா கௌரி விரதம் பச்சைமிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்? Blaise சந்திரன் இருக்க மகரத்தில் குரு thisai விறகு வீட்டின் முன் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆயுள் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று வளைகாப்பு நடத்தலாமா? dinasari horoscope 15.02.2019 Rasipalan in pdf format !! காதலியை கனவில் கண்டால் என்ன பலன்? வடக்கு பகுதியில் எடை மிகுந்த பொருட்களை வைத்துக் கொள்ளலாமா? அமாவாசைக்கு முன் முடி எடுக்கலாமா? daily horoscope 10.02.2020 in pdf format ராகு இங்கு இருந்தால்... நீண்ட ஆயுள்... சொத்துச்சேர்க்கை... இவர்களுக்குத்தான்...!! march 24 தினசரி ராசிபலன் (01.03.2022) வார ராசிபலன்கள் (17-01-2022 - 23-01-2022) PDF வடிவில்...!!