No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரு பெண்ணிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 17, 2020   Ananthi   290    கனவு பலன்கள் 

1. ஒரு பெண்ணிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

2. பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் உத்தியோகஸ்தர்கள் பணியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பூ கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பூ கொடுப்பது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் கூடிய விரைவில் ஈடேறும் என்பதனைக் குறிக்கின்றது.

5. குளத்தில் என்னுடைய தம்பி இறந்து மிதப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் ?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கனவு கண்டால் தனம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. நாவல் பழத்தை பறித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாவல் பழத்தை பறித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் சிறு அலைச்சலுக்கு பின் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends