No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒருவரின் ஜாதகத்தை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா?

Aug 25, 2018   Ananthi   631    ஆன்மிகம் 

🌟 பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பிறப்பானது எவ்வகையில் உறுதி செய்யப்பட்டதோ அதைப்போலவே ஒருவரின் இறப்பும் அவர் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.

🌟 ஒருவருக்கு ஏற்படும் இன்ப, துன்பங்கள் அவர் செய்த கர்ம வினையாலும், இந்த பிறவியில் செய்யும் செயல்களாலும் உண்டாகின்றன என்பதை நாம் நன்கு உணர வேண்டும். நம்மால் நன்மை செய்ய முடியவில்லை என்றாலும் தீமை செய்யாமல் இருப்பதே நன்றாகும்.

ஜாதகத்தை வைத்து நோய்களை கண்டறிய முடியுமா?

🌟 ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அவரின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்தையும் கூற இயலுமா? அதாவது அவரின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் மட்டுமின்றி அவருக்கு ஏற்படும் நோய்கள் ஆகியவற்றையும் கூற முடியுமா?

🌟 ஒருவருடைய ஜாதகத்தை கொண்டு அவரின் குணங்கள், முன்னேற்றம் ஆகியவற்றை கூற இயலும்போது அவருக்கு ஏற்படும் நோய்களை பற்றியும் கூற இயலும்.

ஜோதிடம் :

🌟 ஜோதிடம் என்பது மிகப்பெரிய கலையாகும். இந்த கலைக்காக பல பேர் தன்னுடைய வாழ்நாட்களை அளித்து பெற்ற ஒரு வரப்பிரசாதம் ஆகும். பண்டைய தமிழர்கள் தங்கள் வாழ்நாளில் கற்க வேண்டிய கலைகளாக பகுத்து வைத்த ஆயகலையான 64ல் சோதிடம் என்பது முதன்மையான கலையாகும்.

ஜோதிடமும், மருத்துவமும் :

🌟 ஜோதிடமும், மருத்துவமும் நெருங்கிய தொடர்பு உடையவை. ஏனெனில், இவை இரண்டையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் நவகிரகங்கள் ஆகும்.

🌟 ஜோதிடத்தின் உதவிக் கொண்டு பின்னாளில் ஏற்படும் நோய்கள் மற்றும் துன்பங்களையும் அறிய இயலும். நமது உடலானது பஞ்சபூதங்களால் உருவானது. நம்மை ஆளும் நவகிரகங்களின் தன்மைக்கேற்ற அவர்கள் கொண்ட பலத்தின் அடிப்படையில் என்னென்ன நோய்கள் மற்றும் உடல் கோளாறுகள் ஏற்படும் என்பதை நன்கு கூற இயலும்.

ஆறாம் இடம் :

🌟 ஜோதிடத்தின் ஆறாம் இடத்தினை கொண்டு அவருக்கு ஏற்படும் நோய்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள இயலும்.

🌟 நவகிரங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பல நோய்களை அளிக்க வல்லவர்கள். ஆறாம் இடமோ அல்லது ஆறாம் இடத்தில் இருந்து ஒரு கிரகம் தசை நடக்கும்போது உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

🌟 லக்னாதிபதியின் பலத்தையும், ஆறாம் இடத்தின் வலிமையும் நன்கு அறிந்து அதற்கு தகுந்தாற்போல் ஏற்பட இருக்கும் நோயின் தாக்கத்தையும், காலத்தையும் அறிய இயலும்.



Share this valuable content with your friends