No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவகிரகத்தில் பலமிக்க கிரகம் எது?

Jul 31, 2020   Ananthi   327    ஜோதிடர் பதில்கள் 

1. நவகிரகத்தில் பலமிக்க கிரகம் எது?

🌟 நவகிரகத்தில் பலமிக்க கிரகம் என்பது நைசர்க்கிய பலத்தின் அடிப்படையில் கேது ஆவார்.

2. தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

🌟 உடன் பிறந்தவர்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 சிலர் தம்மை ஏமாற்றுவதாக தெரிந்தாலே அவர்களின் உறவுகளை உடனே முறித்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 காலம், நேரமின்றி எந்த வேலையையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உடையவர்கள்.

🌟 அதீத கற்பனைத்திறன் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 முயற்சிகளால் முன்னேறக்கூடியவர்கள்.

🌟 பொருள் தேடும் திறமை உடையவர்கள்.

🌟 பொய்யை விரும்பாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராகு மற்றும் கேதுவிற்கு ஆட்சி வீடு உள்ளதா?

🌟 ராகு மற்றும் கேதுவிற்கு ஆட்சி வீடு இல்லை.

6. சூரியன் மற்றும் ராகு இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 தந்தைவழி உறவுகளால் ஆதரவு குறைவாக இருக்கும்.

🌟 அரசாங்கம் சம்பந்தமான வேலைகள் முடிவதில் இழுபறி உண்டாகும்.

🌟 இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends