கிரகணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
Jul 03, 2020 Ananthi 327 கனவு பலன்கள்
1. மூதாட்டியுடன் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மூதாட்டியுடன் உரையாடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
2. அறிமுகமில்லாத பெண் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
3. பாம்பை கையால் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பாம்பை கையால் பிடிப்பது போல் கனவு கண்டால் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. கிரகணத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 கிரகணத்தை கனவில் கண்டால் அரசு தொடர்பான பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
5. கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
6. ஊற்றுகளில் இருந்து நீர் வெளியே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தடைபட்ட செயல்களால் வர வேண்டிய பொருள் வரவு கூடிய விரைவில் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
7. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் செய்யாத குற்றத்திற்காக மனம் வருந்துவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.