No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்து ஆலோசனைகளை எப்போதெல்லாம் பெறலாம்?

Aug 22, 2018   Ananthi   483    வாஸ்து 

🏠 ஒரு இடத்தை வாங்கும் முன்பு அந்த இடம் நாம் கட்டக்கூடிய இடத்திற்கு வாஸ்து முறைப்படி சரியானதாக பொருந்துமா? என்பதை பார்த்து வாஸ்து நிபுணரின் ஆலோசனைகளுடன் வாங்குவது சிறப்பு.

🏠 மின்சாரத்தை யாராவது பார்த்தது உண்டா? என்றால் யாரும் இல்லை என்று தான் கூறுவார்கள். ஆனால், மின்சாரத்தின் பயனை இன்று அனுபவிக்காத நபர்களே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

🏠 அதுபோல வாஸ்துவின் பயன்களை அனுபவிக்காத மனிதர்களே இல்லை என்று கூறலாம்.

வாஸ்து ஆலோசனைகளை எப்போதெல்லாம் பெறலாம்?

🏠 காலிமனையோ அல்லது விவசாய நிலமோ வாங்கும்போது

🏠 அந்த வீட்டின் வரைபடம் தயாரிக்கும்போது

🏠 புது வீட்டை அல்லது கட்டிடத்தை கட்ட முற்படும்போது,

🏠 கட்டிய கட்டிடங்களை விலைக்கு வாங்கும்போது,

🏠 நாம் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் விற்பனைக்கு வரும் நிலங்களை வாங்கும் முன்பு

🏠 நம்முடைய மொத்த இடத்தில் ஒரு பகுதியை விற்பனை செய்யும் முன்பு

🏠 குடும்ப சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யும்போது

🏠 வீடுகள்

🏠 கடைகள்

🏠 அடுக்குமாடி குடியிருப்புகள்

🏠 வியாபார ஸ்தலங்கள்

🏠 வணிக வளாகங்கள்

🏠 ஆராய்ச்சி நிறுவனங்கள்

🏠 திருமண மண்டபங்கள்

🏠 கல்வி நிறுவனங்கள்


🏠 என இதுபோன்ற கட்டிடங்களை கட்டும் முன்பு வாஸ்து ஆலோசனைகளை பெறுவது சிறப்பு.

🏠 நமது நிலத்தின் ஒரு பகுதியை விற்கும்போது அந்த பகுதியை விற்கலாமா? அதனால் நமக்கு ஏதாவது நன்மை அல்லது தீமை நடக்குமா? என்று சிந்தித்து பிறகு விற்பனை செய்ய வேண்டும்.

🏠 வீடு, விவசாய நிலத்தில் அண்ணன், தம்பி இருவரும் பாகப்பிரிவினை செய்யும்போது வாஸ்து நிபுணரின் ஆலோசனைகளை பெறுவது சிறப்பு.

🏠 அதேபோல் ஒரு இடத்தில் தெருக்குத்து தெருப்பார்வை வருமானால் அதனால் வரக்கூடிய நன்மை தீமையை தெரிந்து கொண்டு வாங்குவது சிறப்பு.

🏠 தொழில் முடக்கம், பணக்கஷ்டம், குடும்ப உறவுகளில் விரிசல், தொடர் பிரச்சனைகள் வருவது போல ஒரு வீட்டில் நீங்கள் கண்டுபிடிக்கும் பட்சத்தில், அதை சரி செய்யும்போது அனுபவப்பட்ட நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு செய்வது சிறப்பு.


Share this valuable content with your friends