No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வேலையை இழப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 01, 2020   Ananthi   3263    கனவு பலன்கள் 

1. சிவன் சிலையின் தலையில் நீருக்கு பதில் நெருப்பு குழம்பு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பேசுவதற்கு முன்பு சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. ஒருவர் ஆற்றில் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தங்கத்தை கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருப்பதி கோவிலிற்கு செல்லும்போது பாம்பு துரத்துவது போல் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகள் மற்றும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. கிளியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கிளியை கனவில் கண்டால் உத்தியோகம் தொடர்பான மேன்மையான செய்திகள் கிடைக்கும் என்பதை குறிக்கின்றது.

7. என்னுடைய கல்லூரி தோழிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் ஆதரவான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. வேலையை இழப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வேலையை இழப்பது போல் கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் மனத்தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends