No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுவையான உணவுகளை உண்பதில் வல்லவர்கள் இவர்களே!!

Aug 20, 2018   Ananthi   467    ஜோதிடர் பதில்கள் 

1. நான் கும்ப ராசி, சதயம் நட்சத்திரம். இதற்கு பொருந்தும் ஆண் ராசிகள் ‌யாவை?

🌟கும்ப ராசிக்கு பொருந்தும் ராசிகள் துலாம், தனுசு, மகரம், மீனம், ரிஷபம் மற்றும் மிதுனம் ஆகும்.

2. சந்திர திசை, புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟புதன் பலம் பெற்று திசை நடத்தினால் வாக்குவன்மையால் இலாபம் அடைவீர்கள்.

🌟சாதுர்யமான செயல்பாடுகளால் கீர்த்தி உண்டாகும்.

🌟நுட்ப அறிவு மேம்படும்.

3. எனது தாய் இறந்துவிட்டார். எத்தனை நாள் கழித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்? திருமணம் போன்ற நிகழ்வுக்கு எப்போது செல்லலாம்?

🌟திருவிளையாடல் நிகழ்ந்த மற்றும் மலைக்கோவில்களுக்கு ஆறு மாதங்கள் வரை செல்ல வேண்டாம்.

4. நான் தனுசு லக்னம். எனது லக்னாதிபதியாகிய குரு 2ல் நீசமானால் என்ன பலனை தருவார்?

🌟எதிர்பார்த்த தனவரவில் காலதாமதம் உண்டாகும்.

🌟எடுத்த முடிவுகளை செயல்படுத்த முடியாமல் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும்.

🌟தாயாருக்கு உடல் நலக்குறைவுகள் ஏற்படும்.

🌟வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்

5. மீன லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟வலுவான உடல்வாகு உடையவர்கள்.

🌟செய்யும் முயற்சியில் காரிய சித்தி உடையவர்கள்.

🌟பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟மனதில் போராட்ட குணமும், தைரியமும் உடையவர்கள்.

6. நான் கடக ராசி, மகர லக்னம். 7-ல் சனி, சந்திரன் சேர்க்கை இருந்தால் என்ன பலன்?

🌟சுவையான உணவுகளை உண்பதில் வல்லவர்கள்.

🌟சிக்கனமான வாழ்க்கையை விரும்பக்கூடியவர்கள்.

🌟கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟தாமதப்பட்ட திருமண வாழ்க்கையை உடையவர்கள்.


Share this valuable content with your friends