No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அசைவ உணவு சாப்பிட்டால் கோயிலுக்குச் செல்லக் கூடாதா?

Jun 22, 2018   Vahini   396    ஆன்மிகம் 

பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவதும், உணவில் காரம் சேர்த்து சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது உடலில் மந்தநிலையை ஏற்படுத்தும். கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும்.

மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை.

எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது.


Share this valuable content with your friends