No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவபுராணம் பகுதி - 2 : சுந்தரமூர்த்தி நாயனார்...!! பகுதி 3

Mar 25, 2020   Ananthi   489    சிவபுராணம் 

மேலும், அடியார்களுடைய வரலாறுகளையும், அவர்களுடைய பெருமையினையும், அவர்கள் கொண்ட பக்தியின் சிறப்பையும் சற்றும் அறியாதவனாகிய நான்... எவ்விதம் அவர்களைப்பற்றி விரிவாக திருப்பதிகத்தைப் பாட இயலும் ஐயனே?... ஆதலால், எமக்கு அவர்களின் பெருமைகளையும், புகழையும் இனிய செந்தமிழ் பாக்களால் பாடக்கூடிய திறனை அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்று எண்ணினார்.

இவ்வாறு எண்ணிய வண்ணம் பக்திப் பெருக்கோடு பரம்பொருளான எம்பெருமானிடம் இறைஞ்சி நின்று கொண்டிருந்தார் சுந்தரர்.

சுந்தரர் வேண்டிய அருளை பரம்பொருளான எம்பெருமான் அவருக்கு தந்தருளினார். பரம்பொருளான எம்பெருமான் அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றதும் சுந்தரர் தொண்டர்கள் நிறைந்து இருக்கக்கூடிய தேவாசிரிய மண்டபத்திற்கு சென்றார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த தொண்டர்களை வணங்கினார். பின்பு எம்பெருமானின் திருவருளினால் தொண்டர்களின் சுயசரிதத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் தொகுத்து, விரிவாகக் கூறும் வகையில் திருப்பதிகத்தை இனிய பைந்தமிழில்... எம்பெருமானுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இயற்றினார்.

அத்திருப்பதிகமே திருத்தொண்டத் தொகையாகும். இவ்விதமாக எம்பெருமானின் திருவருளினால் திருத்தொண்டத் தொகையை இயற்றி முடித்த சுந்தரர் பிறைசூடிய எம்பெருமானின் அருளால் பரவையாரோடு இணைந்து இனிய இல்லறத்துடன் வாழ்ந்து வந்தார்.

நாவலூரை அடுத்துள்ள குண்டையூர் என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடத்திலும், அடியார்களிடத்திலும் பேரன்பு கொண்டிருந்த குண்டையூர்க் கிழார் என்பவர் வாழ்ந்து வந்தார்.

இப்பெரியார் சுந்தரமூர்த்தி அடியார்களை பற்றி கேள்விப்பட்டதும் எம்பெருமானின் அருளை பரிபூரணமாக கிடைக்க பெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார், என்பதை அறிந்ததும் அவர்களிடத்திலும் எல்லையில்லா அன்பும், பக்தியும் கொண்டு இருந்தார். குண்டையூர்க் கிழார் சுந்தரர் செய்துவரும் அரும் பணிகளுக்கும், அவர் அடியார்களுக்கு அளித்துவரும் ஆதரவிற்கும் மற்றும் அடியார்களுக்கு தேவையான உணவுக்கு தேவைப்படக்கூடிய பொருட்களான நெல், பருப்பு முதலிய பொருட்களையும் எந்நிலையிலும் தவறாமல் அளித்து வந்து கொண்டிருந்தார்.

அவர் மேற்கொண்டிருந்த பணிகளில் இடையூறு ஏற்படும் வண்ணமாக நாட்டில் மழை இல்லாமல் பயிர் விளைச்சலும், உற்பத்தியும் குறையத் தொடங்கின. இந்த தட்டுப்பாட்டினால் அவரால் எப்போதும் போல சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கொடுத்துக் கொண்டிருந்த உணவுப் பொருட்களை தகுந்த காலக்கட்டத்திற்குள் கொடுக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட தொடங்கியது. நாளடைவில் அதுவும் குறையத் தொடங்கியது.

விரல் மிண்ட நாயனார் கூறியதைக் கேட்டதும் அவர் மீது எவ்வித கோபமும் கொள்ளாமல் அவர் அடியாரிடத்தில் எவ்வளவு அன்பும், பக்தியும் கொண்டுள்ளார் என்பதையும், அவருடைய எண்ணத்தையும், செயல்பாடுகளையும் எண்ணி மனதில் பெருமை கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் கொண்ட அந்த எண்ணத்துடனேயே எம்பெருமான் வீற்றிருக்கும் மூலவர் தளத்தை சென்றடைந்தார். அங்கே சென்றதும் எம்பெருமானை வணங்கி,

பரம்பொருளே...

அடியார்களுக்கெல்லாம் அடியாராகும் பேரின்ப நிலையை...

எமக்குத் தந்தருள வேண்டுமென்று...


மனமுருகி எம்பெருமானிடம் வேண்டினார் சுந்தரர்.

யாரும் அறியா வண்ணம் அவருடைய எண்ணமானது செயல்படத் தொடங்கியது. அதாவது, காரணமின்றி காரியமில்லை என்பது போலவே அவரும் எம்பெருமானிடம் கேட்க... எம்பெருமானும் அவ்விடத்தில் எழுந்தருளினார். எம்பெருமானை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த சுந்தரர் அவரை வணங்கி தமது எண்ணத்தை வெளிப்படுத்திய வண்ணம் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது எம்பெருமான் சுந்தரரை நோக்கி,

சுந்தரா...!

எம்மை வழிபடும் அடியார்களின் பெருமைகளையும்,

அவர்களுடைய திறமைகளையும் மொழிந்து அவர்களை பற்றிய அருமைமிக்க, எழில் மிகுந்த தமிழ் பாக்களால் பாடுவாயாக...


என்று திருவாய் மலர்ந்தருளினார்.

பரம்பொருளின் விருப்பத்தை அறிந்ததும் மகிழ்ச்சி கொண்டார் சுந்தரர். ஆயினும் மனதளவில் சிறிது அச்சமும் கொண்டிருந்தார். ஏனெனில் எம்பெருமானை வழிபடும் அடியார்களை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதல்லவா? யான் எப்படி தங்களை வழிபடும் அடியார்களைப் பற்றி பாட இயலும்? மேலும் தங்களை வழிபட்டு கொண்டிருக்கும் திருத்தொண்டர்களை பற்றி பாடுவதற்கு இந்த எளியோனுக்கு எவ்வித தகுதியும் கிடையாது அல்லவா? என்று எண்ணினார்.

மேலும், அடியார்களுடைய வரலாறுகளையும், அவர்களுடைய பெருமையினையும், அவர்கள் கொண்ட பக்தியின் சிறப்பையும் சற்றும் அறியாதவனாகிய நான்... எவ்விதம் அவர்களைப்பற்றி விரிவாக திருப்பதிகத்தைப் பாட இயலும் ஐயனே?... ஆதலால், எமக்கு அவர்களின் பெருமைகளையும், புகழையும் இனிய செந்தமிழ் பாக்களால் பாடக்கூடிய திறனை அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்று எண்ணினார். இவ்வாறு எண்ணிய வண்ணம் பக்திப் பெருக்கோடு பரம்பொருளான எம்பெருமானிடம் இறைஞ்சி நின்று கொண்டிருந்தார் சுந்தரர்.

சுந்தரர் வேண்டிய அருளை பரம்பொருளான எம்பெருமான் அவருக்கு தந்தருளினார். பரம்பொருளான எம்பெருமான் அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றதும் சுந்தரர் தொண்டர்கள் நிறைந்து இருக்கக்கூடிய தேவாசிரிய மண்டபத்திற்கு சென்றார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த தொண்டர்களை வணங்கினார். பின்பு எம்பெருமானின் திருவருளினால் தொண்டர்களின் சுயசரிதத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் தொகுத்து, விரிவாகக் கூறும் வகையில் திருப்பதிகத்தை இனிய பைந்தமிழில்... எம்பெருமானுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இயற்றினார்.

அத்திருப்பதிகமே திருத்தொண்டத் தொகையாகும். இவ்விதமாக எம்பெருமானின் திருவருளினால் திருத்தொண்டத் தொகையை இயற்றி முடித்த சுந்தரர் பிறைசூடிய எம்பெருமானின் அருளால் பரவையாரோடு இணைந்து இனிய இல்லறத்துடன் வாழ்ந்து வந்தார்.

நாவலூரை அடுத்துள்ள குண்டையூர் என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடத்திலும், அடியார்களிடத்திலும் பேரன்பு கொண்டிருந்த குண்டையூர்க் கிழார் என்பவர் வாழ்ந்து வந்தார்.

இப்பெரியார் சுந்தரமூர்த்தி அடியார்களை பற்றி கேள்விப்பட்டதும் எம்பெருமானின் அருளை பரிபூரணமாக கிடைக்க பெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார், என்பதை அறிந்ததும் அவர்களிடத்திலும் எல்லையில்லா அன்பும், பக்தியும் கொண்டு இருந்தார். குண்டையூர்க் கிழார் சுந்தரர் செய்துவரும் அரும் பணிகளுக்கும், அவர் அடியார்களுக்கு அளித்துவரும் ஆதரவிற்கும் மற்றும் அடியார்களுக்கு தேவையான உணவுக்கு தேவைப்படக்கூடிய பொருட்களான நெல், பருப்பு முதலிய பொருட்களையும் எந்நிலையிலும் தவறாமல் அளித்து வந்து கொண்டிருந்தார்.

அவர் மேற்கொண்டிருந்த பணிகளில் இடையூறு ஏற்படும் வண்ணமாக நாட்டில் மழை இல்லாமல் பயிர் விளைச்சலும், உற்பத்தியும் குறையத் தொடங்கின. இந்த தட்டுப்பாட்டினால் அவரால் எப்போதும் போல சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கொடுத்துக் கொண்டிருந்த உணவுப் பொருட்களை தகுந்த காலக்கட்டத்திற்குள் கொடுக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட தொடங்கியது. நாளடைவில் அதுவும் குறையத் தொடங்கியது.

குண்டையூர்க் கிழார் நிகழ்ந்தவற்றை எல்லாம் மனதில் எண்ணிய வண்ணம் எம்பெருமான் இடத்தில் தமது கருத்துக்களையும், எண்ணங்களையும் உரைத்த வண்ணம் மனம் சோர்வாக இருந்து வந்தார். அடியார்களிடத்தில் அன்பு கொண்டிருந்த எம்பெருமான் அவரது மனக்குறையை போக்கும் விதமாக கனவில் எழுந்தருளி... சுந்தரருக்கு நீர் கொடுக்க வேண்டியுள்ள நெல்மணிகளை மலை போல் பரவையார் திருமாளிகைக்கு அனுப்பி உள்ளோம் என்று கூறி மறைந்தார்.

குண்டையூர்க் கிழார் கனவில் எழுந்தருளி உரைத்த வண்ணம் நெல்மணிகளை மலைபோல் குண்டையூர் முழுவதும் நிரப்ப குபேரனுக்கு ஆணையைப் பிறப்பித்தார். குபேரனும் எம்பெருமானின் ஆணையை சிரமேற்கொண்டு குண்டையூர் முழுவதும் நெல்மணிகள் நிறைந்த மலைகளை நிரப்பி வைத்தார். இங்கு நிகழ்ந்த நிகழ்வுகளை கண்டு வியந்து போன குண்டையூர்க் கிழார் எம்பெருமானின் திருவருளையும், சுந்தரரின் அருள் வல்லமையையும் எண்ணி மனம் மகிழ்ந்தார். பின்பு இங்கிருக்கும் நெல்மணிகளை எவ்விதம் சுந்தரின் இல்லத்திற்கு அனுப்புவது? என்று திகைத்து நின்று கொண்டிருந்தார்.

பின்பு இங்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் சுந்தரரிடம் எடுத்துரைக்கும் பொருட்டு திருவாரூருக்கு புறப்பட்டார் குண்டையூர்க் கிழார். குண்டையூர்க் கிழாரின் மனதில் தோன்றிய அடுத்த பிரச்சனையான நெல்மணிகளை எவ்விதம் சுந்தரமூர்த்தியாரின் இல்லத்தில் சேர்ப்பதற்கும், எம்பெருமானே அருளும், வழியும் அமைத்துக் கொடுத்தார். அதாவது, சுந்தரமூர்த்தியார் கனவில் எழுந்தருளிய எம்பெருமான் சுந்தரரே...!! உமக்குக் குண்டையூர் கிழரால் தரவேண்டிய நெல்மணிகளை குண்டையூரில் மலை போல் குவித்து வைத்துள்ளோம் என்று கூறி மறைந்தார்.

கனவில் இருந்து விழித்தெழுந்த சுந்தரர், குண்டையூரில் எம்பெருமானாரால் வியக்கத்தகு செயல் ஒன்று நடைபெற்றுள்ளது என்பதை மட்டும் தெளிவாக அறிந்து கொண்டார். அதை காணும் பொருட்டு பொழுது விடிந்ததும் குண்டையூரை நோக்கி தனது பயணத்தை துவங்கினார். குண்டையூர் வரும் வழியில் சுந்தரமூர்த்தியாரும், குண்டையூர்க் கிழாரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர். ஒருவருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டு தங்களுக்குள் உரையாடி மகிழ்ந்தனர்.

குண்டையூர்க் கிழார் தேவரே... எவ்வித இடர்பாடுகளின்றி நீண்ட காலமாக அடியேன் செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறு ஏற்படும் வண்ணம் சில சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் பொருட்டு எம்பெருமானிடம் வேண்டியபோது கருணைக் கடலான எம்பெருமானும் நெல்மணிகளை மலைபோல் குவித்து வைத்துள்ளார் என்றும், அம்மலைகள் மனிதர்களால் அகற்றப்பட முடியாத அளவிற்கு ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது. அதனை எவ்விதம் தங்கள் மாளிகைக்கு அனுப்புவது? என்று விண்ணப்பம் செய்தாக வேண்டும் என கூறினார்.

சுந்தரர் குண்டையூர்க் கிழாரின் அன்பிற்கும், அவர் எம்பெருமானின் மீது கொண்ட பக்திக்கும் தலை வணங்கினார். பின்பு அவருடன் இனிதாக உரையாடிய வண்ணம் குண்டையூருக்கு வந்தடைந்தார் சுந்தரர். குண்டையூரில் மலைபோல் குவிந்து இருக்கும் நெல்மணிகளை கண்ட வண்ணம் வியந்து நின்றார். சுந்தரர், குண்டையூர்க் கிழாருடன் திருக்கோளிலி என்னும் பகுதிக்கு சென்றார். அவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை பணிந்த வண்ணம் நெல்மணிமலையை திருவாரூருக்கு சேர்க்கும் பொருட்டு,

"நீள நினைந் தடியே னுமைநித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே
கோளிலியெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றே
னாளிலை யெம்பெருமா னவை யட்டித் தரப்பணியே"


என்ற பதிகம் ஒன்றைப் பாடினார்.
சுந்தரர் பாடிய பதிகத்தால் மனம் மகிழ்ந்த எம்பெருமான் அப்பொழுது வானில் அசரீரி ஒன்று உருவானது. இன்று பகற்பொழுது முற்றிலும் நீங்கிய வண்ணம் நம்முடைய பூதங்கள் பரவையார் வீடு மாத்திரமின்றி திருவாரூர் முழுவதும் நிறையும்படி இங்கு நிறைந்திருக்கும் நெல்மணிமலையை அவ்விடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் என்று வானத்தில் இருந்து அசரீரி வாக்குத் தோன்றியது.

சுந்தரர், குண்டையூர்க் கிழாரிடம் விடைபெற்றுக் கொண்டு திருவாரூருக்கு புறப்பட்ட அன்றைய இரவே சிவபெருமானின் ஆணைப்படி பூதகணங்கள் குண்டையூரிலுள்ள நெல்மணிமலையை எடுத்துச் சென்று பரவையார் மாளிகையிலும், திருவாரூரில் உள்ள அனைத்து பெருவீதிகளிலும் நிரப்பினர். முழு நிலவு மறைய... ஆதவன் உதிக்க... பொழுது புதியதாக துவங்கியபோது ஊர் முழுவதும் நிரம்பியிருக்கும் நெற்குவியலை கண்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

பின்பு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பெருமைகளையும், எம்பெருமானின் மீது அவர் கொண்ட பக்தியையும் புகழ்ந்து உரைத்துக் கொண்டே இருந்தனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் உங்கள் வீட்டின் முன் உள்ள நெற்குவியலை அவரவர்களே, தங்கள் இல்லங்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று ஊர் முழுவதும் அறிவித்தார்.

இவ்விதமாக சுந்தரர் பார் வியக்க எம்பெருமானின் அருளால் பல அதிசயங்களை நிகழ்த்திய வண்ணம் கீர்த்தியுடன் வாழ்ந்து வந்தார். இவ்விதமாக நிகழ்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் குண்டையூர்க் கிழாரைப் போலவே, சுந்தரிடம் உளவலன்பு பூண்டுள்ள அன்பன் ஒருவர் திருவாரூரை அடுத்துள்ள திருநாட்டியாத்தான்குடி என்னும் திருத்தலத்தில் வாழ்ந்து வந்தார்.

அவர் பெயர் கோட்புலியார். ஒருமுறை கோட்புலியார் விரும்பி அழைத்ததன் பொருட்டு, சுந்தரர் பல சிவத்தலங்களை வணங்கிய வண்ணம் திருநாட்டியாத்தான்குடிக்கு புறப்பட்டார். சுந்தரர் தம்மை காண வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் அவரை வரவேற்க சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சுந்தரரும், கோட்புலியாரும் ஒருவருக்கொருவர் சந்தித்து மனம் மகிழ்ந்து, ஆரத்தழுவிக் கொண்டு தமது திருமாளிகைக்கு அழைத்து வந்தார்.

கோட்புலியார், சுந்தரரை வரவேற்று அவருக்கு அதற்காகவே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிருந்த பீடத்தில் அமரச்செய்து அவர் பாத கமலங்களை தூய்மை செய்து அந்நீரை தம் மீதும், தமது குடும்பத்தினர் மீதும் பின்பு தனது வீடு முழுவதும் தெளித்தார். பின்பு அவருக்கென சிறந்ததொரு முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை பரிமாறி அவருக்கு உரிய மரியாதைகளை முறைப்படி செய்து அவரை வழிபட்டு தொழுதார்.

சுந்தரர் தமது வீட்டில் உணவு உண்பதை பெரும் பாக்கியமாக கருதி தனது பிறவியின் பலனை அடைந்தது போல மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். பின்பு தாம் பெற்ற புதல்விகளாகிய சிங்கடியார், வனப்பகையார் ஆகிய இருவரையும் அழைத்து வந்து சுந்தரரின் திருவடிகளை வழிபடச் செய்தார். பின்பு சுந்தரரிடம் இவர்கள் இருவரும் என் புதல்விகள் இவள் பெயர் சிங்கடியார் என்றும், மற்றொருவரின் பெயர் வனப்பகையார் என்றும் தனது இரு மகள்களையும் சுந்தரரிடம் அறிமுகம் செய்து, இவர்கள் இருவரையும் தாங்கள் அடிமைகளாக ஏற்றுக் கொண்டு அருள் புரிதல் வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார்.

சுந்தரர் அவ்விரு பெண்மணிகளை வாழ்த்தி இவர்கள் என் குழந்தைகள் என்று சொல்லி அவர்கள் இருவரையும் அன்போடு தன்னுடைய மடிமீது அமர்த்தி... உச்சி மோந்து... அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். தம்முடைய இரு புதல்விகளையும் சுந்தரனார் ஏற்றுக் கொண்டதை எண்ணி மனமகிழ்ச்சி அடைந்தார் கோட்புலியார்.

சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கிருந்து அனைவரும் அருகில் உள்ள திருநாட்டியாத்தான்குடிக் கோவிலை அடைந்து "பூணணாவ தோரரவம்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி வணங்கினார். ஓரிரு தினங்களில், அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த பிறகு, திருவலிவலம் வழியாக திருவாரூரை வந்தடைந்தார். திருவாரூரில் தங்கியிருந்து தினந்தோறும் தியாகேச பெருமானை தமிழ் பதிகங்களால் வழிபட்டு வந்தார். மாதங்கள் பல கடந்தன. திருவாரூரில் பங்குனி உத்திரத் திருவிழா நெருங்கியது.

ஒவ்வொரு வருடமும் எம்பெருமானுக்கு செய்யும் பங்குனி உத்திரத் திருவிழாவில் விண்ணில் வாழும் தேவர்களும், மண்ணுலகில் வாழும் மனிதர்களும் வியக்கும் வண்ணம் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெறும். இத்திருவிழா காலத்தில் பரவையார் எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கும், பக்தர்களுக்கும் தான தருமங்கள் செய்வார். எம்பெருமான் சன்னிதானத்தில் எழில்மிகு நடனம் ஆடிக் களிப்பார்.

இவ்வாண்டும் அதுபோலவே அடியார்களுக்கு தேவையான பொன்னும், பொருளும் திரட்ட சுந்தரர் அன்பர்களோடு பரவையாரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு புகலூருக்கு புறப்பட்டார். புகலூர் தலத்தை அடைந்த சுந்தரர், அவ்விடத்தில் குடிக்கொண்டிருக்கும் சடைமுடிப் பெருமானிடம் தாம் வந்துள்ள கருத்தினை கூறி பதிகம் ஒன்றைப் பாடினார். அன்றிரவு சுந்தரர் அன்பர்களுடன் ஆலயத்திற்கு அருகிலுள்ள எந்த மடத்திலும் சென்று துயில் கொள்ளாமல் முற்றத்தில் துயில் கொள்ள விருப்பம் கொண்டார்.

திருக்கோவிலின் வெளியே திருப்பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுட்ட செங்கற்கள் பலவற்றை எடுத்து வந்து உயரமாக பீடம் அமைத்து அதன் மீது தாம் கொண்டு வந்திருந்த வெண்பட்டாடையை விரித்து படுத்துக் கொண்டார். சுந்தரர் துயில் முடித்து எழுந்து பார்த்தபோது எம்பெருமானுடைய அருளினால் செங்கற்கட்டிகள் அனைத்தும் செம்பொன் கட்டிகளாக மாறி இருப்பதைக் கண்டு வியந்து நின்றார். எம்பெருமானின் அருளால் அகம்மகிழ்ந்த சுந்தரர், அன்பர்களுடன் ஆனந்தக் கூத்தாடினார்.

பைந்தமிழ் பாக்களால் எம்பெருமானின் பாத கமலங்களை பணிந்தார். அவ்விடத்தில் இருந்து கிடைத்த பொற்குவியலுடன் சுந்தரர் பல சிவத்தலங்களுக்கு சென்று அவரை வணங்கிய வண்ணம் திருவாரூரை வந்தடைந்தார். பரவையாரிடம் புகலூர் பெருமானின் திருவருளை வியந்து கூறி ஆனந்தம் கொண்டார். ஒருசில நாட்களில் மீண்டும் பரவையாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

பரவையாரிடம் இருந்து விடைபெற்று கொண்டு புறப்பட்ட சுந்தரர் நன்னிலத்துப் பெருங்கோவிலை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருவடியைத் தொழுது பதிகப் பாமாலையினை புனைந்து பணிந்தேத்தினார். அன்று இரவு எம்பெருமான் சுந்தரரின் சொப்பனத்தில் எழுந்தருளி திருமழப்பாடிக்கு வர மறந்தாயோ? என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். சொப்பனத்தில் எம்பெருமான் எழுந்து மறைந்ததும் சுந்தரர் கனவில் இருந்து விழித்தெழுந்தார். எம்பெருமானின் ஆணையை கேட்டதும் சுந்தரர் மனம் மகிழ்ந்தார்.

எம்பெருமானின் விருப்பம் இதுவென அறிந்ததும் அப்பொழுதே அன்பர்களுடன் புறப்பட்டு காவிரியைக் கடந்து வடகரையை அடைந்து திருமழப்பாடி என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வழிபட்டு தொழுது "பொன்னார் மேனியனே" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி எம்பெருமானை போற்றினார். சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து எம்பெருமானை வணங்கி பின்பு அங்கிருந்து புறப்பட்டார். காவிரியாற்றின் இருபக்கங்களிலும் உள்ள திருக்கோவில்களை வழிபட்ட பின்னர் மேற்கு நோக்கி சென்ற வண்ணமாக தனது பயணத்தை மேற்கொண்டவர் திருவானைக்காவை அடைந்தார்.

சுந்தரர் இவ்விடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததும் அத்தலத்திலுள்ள தொண்டர்கள் ஆரூரரை வரவேற்று மகிழ்ந்தனர். அன்பர்கள் சூழ சுந்தரர் "மறைகளாயின நான்கும்" என்னும் திருப்பதிகப் பாடல்களை பாடிய வண்ணம் கோவிலை அடைந்து பெருமானை வணங்கி வழிபட்டு பதிகங்கள் பல பாடினார். பிறகு அவ்வூரை விட்டு நீங்கி திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் தலத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளி அருள்புரியும் எம்பெருமானிடம் பொன் வேண்டி பாடினார்.

வேண்டுவனவற்றை வேண்டினாலும் கொடுப்பதில் பல சோதனைகளை செய்து கொடுக்க வல்லவராயிற்றே எம்பெருமான். அவ்விதம் போலவே பரமன் சுந்தரரை சோதிக்க எண்ணி பொன்னை கொடுத்தருளாது நின்றார். இறைவனையே தன்னுடைய உற்ற நண்பராக கொண்ட சுந்தரர் பொன் தராத பரமனிடம் தமக்குள்ள அன்பின் உரிமையால் அவரைக் கடிந்து கொள்ளக் கருதி "வைத்தனன் தனக்கே தலையுமென் நாவும்" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஒவ்வொரு பாடலின் கடைசி அடிதோறும், இவர் இல்லாமற் போய்விட்டாரோ? என்று பொருள்படுமாறும் "இரவலா தில்லையோ பிராமனார்" என்று இகழ்ந்தும் பாடினார்.

சுந்தரர் தம்மீது கொண்ட சக்தியால் மனம் இறங்கிய எம்பெருமான் சுந்தரர் வேண்டிய பொற்குவியலை கொடுத்தருளினார். சுந்தரர் எம்பெருமான் அருளிய பொற்குவியலுடன், புறப்பட்டு திருப்பைஞ்ஞலியை அடைந்தார். அரணார் மலரடியை போற்றினார். எம்பெருமான் சுந்தரருக்கு கங்காள வேடத்துடன் திருக்காட்சி கொடுத்து அருளினார். சுந்தரர், உள்ளம் உருக பதிகம் ஒன்றைப் பாடினார்.

அங்கிருந்து புறப்பட்டு திருஈங்கோய்மலையைத் தரிசித்துக் கொண்டே கொங்கு நாட்டில் காவிரியின் தென்கரையில் விளங்கும் திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் கொடுமுடி நாதரைப் போற்றி "மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்பாதமே மனம் பாவித்தேன்" எனத் தொடங்கும் நமசிவாய பதிகம் ஒன்று பாடி உலகமெல்லாம் உய்ய அருள் செய்தார்.

பின்னர், காஞ்சி நதிக்கரையில் அமைந்துள்ள திருப்போரூர் கோவிலை வந்தடைந்தார். அங்கு எம்பெருமானைக் காணவில்லை. அதனால் மனம் புண்பட்டார். அங்கிருந்த நந்திதேவரின் குறிப்பால், எம்பெருமான் இருக்குமிடத்தை அறிந்து கொண்ட சுந்தரர் வயற்பக்கம் வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை மெய்மறக்க செய்தது!

வயற்புறத்தில் திரிபுரம் எரித்தவன்...

உழவுத்தொழில் செய்யும் பணியாளனாகவும்...

அவன் உடம்பில் பாதியைப் பெற்ற பார்வதி தேவியோ...

பணிப் பெண்ணாகவும்...

திருக்கோலம் கொண்டிருந்தார்கள்.

லட்சுமி, சரஸ்வதி, இந்திராணி முதலிய தேவியர்கள், சிவகணத் தலைவர்களும் வயலில் உழுவதும், நீர் பாய்ச்சுவதும், நாற்று நடுவதுமாக இருந்தனர்.


மதுரையில் திருவிளையாடல்கள் பலபுரிந்த திருசடையான், இன்று தம் பொருட்டு உழவன் திருக்கோலம் பூண்டு நடத்தும் திருக்கூத்து கண்டு ஐயன் மீது ஆராக்காதலுடன் "மறையவனரசன் செட்டி தன் தாதை" எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். இங்ஙனம் வயலில் வருந்தி உழுவது யார் பொருட்டு ஐயனே!!... என்று நிலத்தில் வீழ்ந்து, பணிந்து வினவியதும், எம்பெருமான் தில்லையம்பலத்திலே நின்றாடுகின்ற தமது நர்த்தனக் கோலத்தினைச் சுந்தரருக்கு கோவிலினுள் காட்டியருளினார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து இறை வழிபாடுகளை செய்து வந்தார்.

சுந்தரர் அவ்விடத்திலிருந்து திருவெஞ்சமாக்கூடல், திருக்கற்குடி மலை, திருப்புறம்பயம் வழியாக சிவதரிசனம் செய்து கொண்டே கூடலையாற்றூர் என்னும் பதியை அணுகினார். அவ்வூர் அருகே சென்றவர் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வணங்காமல், திருமுதுகுன்றூரினை நோக்கிப் புறப்பட்டார். அப்பொழுது எம்பெருமான் அந்தணர் வடிவம் கொண்டு சுந்தரர் முன்னால் தோன்றினார்.

சுந்தரர் அவரிடம், ஐயனே! திருமுதுகுன்றூருக்கு செல்லும் வழியினை எமக்கு சொல்லும்... என்று வினவ அவ்வேதியர், இவ்வழி கூடலையாற்றூருக்குப் போகும் வழியாகும் என்று விடை கூறிய வண்ணம் சுந்தரருக்கு அவ்வூர் எல்லை வரை வழித்துணையாக வழிகாட்டிச் சென்று மறைந்தருளினார். தனக்கு வழிகாட்டி கொண்டு வந்திருந்த வேதியர் அவ்விடத்தை விட்டு மறைந்ததும் வியந்து நின்றுக் கொண்டு இருந்தார் சுந்தரர்.

இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்ற செயலானது எம்பெருமானின் திருவருளால்தான் என்று மனதில் நினைத்த வண்ணம் சுந்தரர் கூடலையாற்றூரை அடைந்து, சுவாமி தரிசனம் செய்து கொண்டு "வடிவுடை மழுவேந்தி" என்றெடுத்து "அடிகளிவ் வழிபோந்த வதிசய மறியேனே" என்னும் திருப்பதிகத்தை பாடி வழித்துணையாய் வந்த பெருமானை வணங்கிப் போற்றினார். பின்பு திருமுதுகுன்றூரினை அடைந்தார்.

திருமுதுகுன்றூர் திருக்கோவிலின் கோபுரத்தை எல்லையில் நின்ற வண்ணம் எம்பெருமானை போற்றிய சுந்தரர் திருக்கோவிலுக்குள் புகுந்து, வலம் வந்து திருமுதுகுன்றூர் இறைவனை வணங்கி, "நஞ்சியிடை" என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றையும் பாடினார். அந்த பதிகத்தை பாடி முடித்ததும் பரமனின் மீது கொண்ட பொருள் பெறும் மனக்குறிப்புடன் "மெய்யில் வெண்பொடி" எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றை பாடினார்.

சுந்தரர் பாடிய பைந்தமிழ் பாக்களால் மனம் மகிழ்ந்த பனிமதிச்சடையார், சுந்தரருக்கு பனிரெண்டாயிரம் பொற்காசுகளை கொடுத்தருளினார். பரமனிடம் இருந்து பொற்காசுகளைப் பெற்று பெருமகிழ்ச்சி கொண்ட சுந்தரர், இவற்றை எங்ஙனம் திருவாரூரிற்கு எடுத்து செல்வது? என்று மனம் கலங்கியபோது, எம்பெருமான் அதற்கும் வான் வழியே ஒரு தீர்வை அளிக்கும் விதத்தில் ஓர் அசரீரியாக... யாம் உமக்கு அளித்த இப்பொற்காசுகளை மணிமுத்தாற்றில் மூழ்கச் செய்து திருவாரூர் திருக்குளத்திலே எடுத்துக்கொள்வாயாக... என்று அசரீரி வாக்கின் மூலம் அருளி மறைந்தார்.

பொன் அனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு, "அன்று என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன்" என்று மனதில் எண்ணிய வண்ணம் பொன்னின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி இருந்த பொன்னை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டார். சிலகாலம் அவ்விடத்தில் தங்கியிருந்து எம்பெருமானுக்கு தொண்டுகள் பல செய்து கொண்டிருந்தார்.

சில நாட்கள் கடந்த பின்னர் முதுகுன்றூரை விட்டு புறப்பட்டு சுந்தரர் தில்லையிலே நடனம் புரியும் பரமனின் அற்புத நடனத்தை கண்டு களித்து மகிழ பெரும் விருப்பம் கொண்டார். தன்னுடைய மனம் மற்றும் சித்தத்தை தில்லையில் நிறுத்திய வண்ணம் சுந்தரர், கடம்பூர் முதலிய சிவதலங்களை வணங்கி வழிபட்ட பின்பு தில்லையம்பதியை அடைந்தார்.

தில்லைத் திருவீதியை வலம் வந்து கோபுரத்தை வணங்கி கோவிலினுள் சென்று பொன்னம்பலவனைத் தொழுதார். எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்தவராக சுந்தரர் கண்ணீர் பெருக அம்பலத்தரசரின் திருவருட்தாளினை வீழ்ந்து வணங்கி, "மடித்தாடுமடிமைக் களன்றியே" என்னும் திருப்பதிகம் பாடினார். தாம் சபாநாயகரைத் திருப்போரூரிலே கண்ட நிலையைச் சிறப்பித்து, அத்திருப்பதிகத்திலே "மீகொங்கிலணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே" என்று அருளிச் செய்தார்.

சுந்தரர், தில்லைவாழ் அந்தணர்களோடு சிலகாலம் தில்லையில் தங்கியிருந்து பரமனின் தரிசனத்தை மனதார கண்டு மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், கானாட்டுமுள்ள10ர், எதிர்கொள்பாடி, வேள்விக்குடி முதலிய தலங்களை வழிபட்டு திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை அடைந்தார். பின் பூங்கோவிற் பெருமானைத் தொழுது பரவையார் திருமாளிகையை அடைந்த சுந்தரரை, பரவையார் மனமும், முகமும் மலர வரவேற்றார். அவருடைய பாதக்கமலங்களில் நறுமலர்களைத் தூவி வணங்கினார்.

சுந்தரர் பரவையாரிடம் எம்பெருமான் செய்த திருவிளையாடல்கள் மற்றும் பயணம் மேற்கொள்ளும்போது நிகழ்ந்த நிகழ்வுகள் யாவற்றையும் எடுத்துரைத்துக் கொண்டு இருந்தார். அப்போது முதுகுன்றூர் பெருமான் தமக்கு அளித்த பொற்குவியலை பற்றியும், அந்த பொற்குவியல் எம்பெருமானின் விருப்பப்படி மணிமுத்தாற்றில் இட்டோம் என்றும், இப்பொழுது எம்பெருமானின் திருவருளால் அந்த பொற்குவியலை இத்திருத்தலத்திலுள்ள கமலாலயப் பொய்கையிலே எடுத்துக்காட்டுகின்றேன் என்று உரைத்த வண்ணம் குளத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

பின்பு பரவையாரிடம் நீ எம்முடன் வருவாயாக... என்று உரைத்த வண்ணம் சுந்தரருடன் பொற்றாமரைக் குளத்திற்கு செல்வோம் என்று கூறிய வண்ணம் முதுகுன்றூரில் நடந்தவற்றை எல்லாம் விளக்கினார். அம்மையாரின் முகம் ஆதவன் வரும் போது உதிக்கும் சூரியகாந்தியை போல் மலர்ந்தது.

சுந்தரர் உரைத்தவற்றை எல்லாம் கேட்டதும் அம்மையார் பெரும் வியப்பில் மூழ்கினாள். அம்மையாரோ தாங்கள் கூறுவதை எல்லாம் கேட்கும்போது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் கூறியது போல் அது எங்ஙனம் சாத்தியமாகும்? என்று இதழ்களில் புன்னகை தழும்ப... ஆனால் மனதில் ஒருவிதமான ஐயத்துடன் கேட்டாள்.

சுந்தரமூர்த்தியாரோ பரவையாரிடம் நமது கடவுளான எம்பெருமானின் திருவருளால் பொன் முழுவதும் குளத்திலேயே எடுத்து உனக்கு தருகின்றேன், இது சத்தியம் என்று உரைத்த வண்ணம் என்னோடு நீயும் கோவிலுக்கு வருவாயாக... என்று அவரையும் அழைத்துக் கொண்டு திருக்கோவிலுக்கு வந்தார். திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் வன்மீகநாதரை வணங்கிக் கொண்டு கோவிலை வலம் வந்து மேற்கு திசையில் இருக்கின்ற கமலாலய திருக்குளத்தை அடைந்தார்.

அதன் வடகிழக்கு கரையிலேயே போய் பரவையாரை நிறுத்தி எம்பெருமானை மனதில் எண்ணிய வண்ணம் குளத்தில் இறங்கி அவ்விடத்தில் பொன்னை வேண்டி தேடினார். அதற்குள் சுந்தரர் கோவிலின் திருக்குளத்தில் இருந்து பொன் எடுக்கப் போகின்றார் என்ற செய்தியானது மக்களிடையே பரவியதும் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் கமலாலயக் குளத்தில் வந்து சுந்தரர் எடுக்கப்போகும் அந்த அதிசய காட்சியை காண அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.



Share this valuable content with your friends