No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் எந்த வயதில் எழுத வேண்டும்?

Mar 23, 2020   Ananthi   506    ஜோதிடர் பதில்கள் 

1. பாஸ்கரா யோகம் என்றால் என்ன?

🌟 லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருப்பது பாஸ்கரா யோகம் என்று அழைக்கப்படுகிறது.

2. ஒரே ராசி உள்ளவர்கள் திருமணம் ‌செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே ராசி உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

3. பங்குனி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யலாமா?

🌟 பங்குனி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்வதை விடுத்து மற்ற மாதங்களில் செய்யலாம்.

4. சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாம்.

5. சுக்கிரன் ஆட்சி பெற்றிருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதில் அலாதிப் பிரியம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் எந்த வயதில் எழுத வேண்டும்?

🌟 பிறந்த குழந்தைக்கு ஜாதகம் 11 மாதம் அல்லது ஒரு வயது முடிந்தவுடன் எழுத வேண்டும்.

7. பெண்களின் தலையில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 முன்கோபம் உடையவர்களாக இருப்பார்கள்.

🌟 சிலர் எதிலும் நிதானமாக செயல்படக்கூடிய தன்மை கொண்டவர்கள்.

🌟 மனவலிமை குறைந்தவர்களாக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends