🌟 சிவபெருமான், என்னையே நீ பிடித்ததால் இனிமேல் 'சனீஸ்வரன்" என்ற பெயருடன் அனைவரும் உன்னை அழைப்பார்கள் என்று அருளினார். அன்று முதல் சனிபகவானிற்கு 'சனீஸ்வரன்" என்ற பெயர் வந்தது.
🌟 கிரகங்களில் ஈஸ்வரன் என்ற சிறப்பு பெயருக்கு காரணமாகி நிற்பவர் 'சனி"தான். பொதுவாக சனி என்றாலே, எல்லோரையும் ஆட்டி வைப்பவர் என்று பொருள். ஆனால் தன்னை யார் சிரத்தையோடு வழிபடுகிறார்களோ அவர்களுக்கு, கருணையை அள்ளித் தரும் வள்ளல் இவர்தான்.
🌟 சனிபகவானை ஆலயங்களுக்கு சென்று வணங்குவதைவிட, நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்தும் சனிபகவானின் அருளை மிகப்பெரிய அளவில் பெறலாம்.
🌟 லக்னத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு ஆயுள் விருத்தி உண்டாகும்.
லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?
👉 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.
👉 எதிலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
👉 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.
👉 செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும்.
👉 வஞ்சக எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
👉 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
👉 எதிலும் அக்கறை இல்லாமல் இருப்பார்கள்.
👉 வைராக்கிய குணம் உடையவர்கள்.
👉 சோம்பல் குணம் உடையவராக இருப்பார்கள்.