No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆண்டாள் அவதரித்த நாள்.!!

Aug 13, 2018   Ananthi   505    ஆன்மிகம் 

🌟 ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டியிருக்கும். அதே ஆடி மாதம் பெருமாள் கோவில்களில் சூடித்தந்த சுடர்க்கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடைபெறுவதும் வழக்கம்.

🌟 மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, சகலமும் அவனே என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள்.

ஆண்டாள் அவதரித்த நாள் :

🌟 ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். துளசி தோட்டத்தில் அவதரித்த ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதாகும்.

🌟 ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை, வடமாநில மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவார்கள்.

🌟 பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.

🌟 அன்னை உள்ளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். ஆடிப்பூரம் அன்று பூமி தாயினை வழிபட்டு அவளின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

ஆடிப்பூர வழிபாட்டின் நன்மைகள் :

🌟 எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். இதை அணிந்துக்கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌟 அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துக்கொண்டால், சுகப்பிரசவம் நிகழும்.

🌟 ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது.

🌟 ஆடிப்பூரத்தன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பார்கள்.

🌟 ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட, கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும்.

ஆடிப்பூர விழா :

🌟 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா முளைக்கொட்டு விழா என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிரகாரத்திற்கு ஆடி வீதி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

🌟 திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வளைகாப்பு விழா பதினாறு கால் மண்டபத்தில் ஆடிப்பூரமான இன்று மிகச் சிறப்பாக நடைபெறும்.

🌟 இதேபோல் திருக்கருகாவூர் அம்மனுக்கும் ருது சாந்தி விழா வைபவம் நடைபெறும். அப்போது பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்து பெற்றுக்கொள்வார்கள்.


Share this valuable content with your friends


Tags

பூவை கனவில் கண்டால் பொரி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 5ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? ஆயில்யம் நட்சத்திரம் உள்ள ஆணை திருமணம் செய்யலாமா? முடிக்காணிக்கையை குடும்பத்தில் நான்கு பேர் தரலாமா? உ என்பது காத்தல் எழுத்து வீடு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? oil items குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடிய கோகுலாஷ்டமி இந்த வார் ராசிபலன்கள் (26.11.2018 - 02.12.2018) PDF வடிவில் !! தினசரி ராசிபலன்கள் (02.06.2020) திருமணத்தடை இரண்டு சக்கர வாகனம் காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம லக்னம் நெருங்கிய உறவினருக்கு திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அமாவாசைக்கு அடுத்த நாள் வெளியூர் பயணம் செல்லலாமா? Sunday Horoscope - 01.07.2018 valaikappu sugar செல்வம் பெருகும்