No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இனிப்பு பலகாரம் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Feb 19, 2020   Ananthi   8327    கனவு பலன்கள் 

1. கருநாக பாம்பு காலை சுற்றி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. தென்னை மரம் முறிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வீட்டில் இருப்பவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பல் ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் ஆடுவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. மீன் வாங்கி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தேவையற்ற செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தங்கத்தை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. வாழைப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வாழைப்பழத்தை கனவில் கண்டால் சுபச்செயல்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

7. தேங்காயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தேங்காயை கனவில் கண்டால் வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. இனிப்பு பலகாரம் உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் விரைவில் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

9. திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends