No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உங்கள் ஜாதகத்தில் குரு... எந்த இடத்தில் இருக்கிறார்? என்ன பலன் தெரியுமா?

Feb 12, 2020   Malini   336    ஆன்மிகம் 

🌟 குரு என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு.

🌟 இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்கள் செய்து தேவர்களின் குருவாக மாறினார்.

🌟 அத்துடன் திட்டையில் கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரை வணங்கி நவகிரக அந்தஸ்து பெற்றார். அதனால் பிரகஸ்பதியின் கிரகமான வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.

குருவின் வேறு பெயர்கள் :

🌟 இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.

🌟 லக்னத்தில் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு நன்மைகள் உண்டாகும்.


லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

👉 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

👉 சிறப்பான பேச்சாற்றல் கொண்டவர்கள்.

👉 இறை நம்பிக்கை உடையவர்கள்.

👉 நேர்மையான குணநலன்களை கொண்டவர்கள்.

👉 பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

👉 தனலாபம் கொண்டவர்கள்.

👉 தன்னம்பிக்கை உடையவர்கள்.

👉 ஆசைகள் இல்லாதவர்கள்.

👉 தேக ஆரோக்கியம் கொண்டவர்கள்.

👉 அழகிய உருவம் உடையவர்கள்.

👉 சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்கள்.

👉 வாக்குவன்மை உடையவர்கள்.

👉 நெருக்கமானவர்களால் ஏமாற்றம் ஏற்படும்.

👉 பிரபலமானவர்களின் தொடர்புகளை உடையவர்கள்.

👉 மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காதவர்கள்.

👉 படிப்படியான முன்னேற்றத்தை கொண்டவர்கள்.

👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

👉 மற்றவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படக்கூடியவர்கள்.



Share this valuable content with your friends